காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட இளைஞர் வைரலாகும் வீடியோ

காஷமீர் மக்களை ஒரு மனிதனாக மதிக்கும் அவசியம் இல்லை என்பதை ராணுவம் காட்டியிருக்கிறது. ஒரு ராணுவ ஜீப்பின் முன் பக்கத்தில் ஒரு காஷ்மீர் இளைஞரை கட்டிவைத்து ஜீப் சென்று கொண்டிருப்பதாக 16 நிமிடங்கள் ஓடும் ஒரு காணொளி வெளியாகி பரபரப்பானது. இந்த காட்சியைக் கண்டு காஷ்மீர் மனித உரிமை அமைப்புகள் கொந்தளித்தன. மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றன.