சவூதி அரேபிய அளித்திருக்கும் பொதுமன்னிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

ரியாத் மத்திய மண்டலம் தமிழ் தஃவா-தமுமுக & தஃபர்ரஜ் அமைப்பு இனைந்து சவூதி அரசு அளித்திருக்கும் பொது மன்னிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது கடந்த 7.4.2017 வெள்ளிக்கிழமை அன்று கிளாஸிக் உள்ளரங்கத்தில் நடந்தது. ரியாத் மத்திய மண்டலம் தமிழ் தஃவா-தமுமுக & தஃபர்ரஜ் அமைப்பு இனைந்து சவூதி அரசு அளித்திருக்கும் பொது மன்னிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது கடந்த 7.4.2017 வெள்ளிக்கிழமை அன்று கிளாஸிக் உள்ளரங்கத்தில் நடந்தது.

இதில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் தலைமை தாங்கினார். தமுமுக மண்டல செயலாளர் மீமிசல் நூர் முஹம்மது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகள் மற்றும் தஃபர்ரஜ் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரியாத் தமுமுக சமூக நலத்துறை செயலாளர் மௌலவி ஜமால் உமரி கிராத் ஓதினார்.  தஃபர்ரஜ் ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தூதரக முதன்மை அதிகாரி ராஜமாணிக்கம், தூதரக தொழிலாளர் நலத்துறை உயர் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.. அதனைத் தொடர்ந்து  ஏர் இந்தியா மண்டல மேலாளர் குந்தன்லால், ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ள சலுகைகள் பற்றி விளக்கம் அளித்தார். தூதரக சமூக சேவகர் ஜமால், வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து தமுமுக தஃவா பொருப்பாளர்  மௌலவி இப்ராஹீம், இஸ்லாம் கூறும் சமுதய சேவைகள் என்று தலைப்பில் சிற்றுரையுடன் நன்றி கூறினார்.
பாதிப்புக்கு உள்ளான சகோதரர்களுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனை மேஜைகள் அமைக்கப்பட்டன நேரம் அதிகமானதால் அனைவருக்கும் முடிந்த அளவு ஆலோசனை வழங்கப்பட்டு. மேலதிக தகவல் பெற தூதரக தன்னார்வ தொண்டர்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் பொதுமன்னிப்பு குறித்து தெளிவு பெற்ற திருப்தியுடன் கலைந்து சென்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்பான பரப்புரையிலும், நிகழ்ச்சி அரங்க களப்பணியிலும் பத்தாஹ், சுலைமானிய, அஸிசீயா, நஸீம், நியு செனையா, மலாஸ் கிளை சகோதரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.


மேலும் வாசிக்க....

சவூதி அரேபியாவில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு