கொத்தடிமை மீட்ட தமுமுக

தமுமுக

சேலம் ஜங்ஷன் பகுதியில் கடந்த செப்.27,2017 அன்று 19 வயதுடைய பெண்ணும்22 வயதுடைய ஆணும் ஆந்திரா , குண்டூர் மாவட்டத்திலிருந்து சேலம் இரயில் நிலையம் வந்து தடுமாறி அலைந்துள்ளனர்.

இதை பார்த்த சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் நான் உங்களுக்கு வாழ்க்கை அமைத்து தருகிறேன் என்று கூறி இரண்டுமாத காலம் வெளியில் விடாமல் கொத்தடிமைகளாக பிடித்து வைத்துள்ளார்.
இதையறிந்த சூரலமங்கலம் பகுதி 19வது கோட்ட தமுமுக சகோதரர்கள் சித்ராவிடம் கொத்தடிமையாக பிடிக்கப்பட்ட ஆயிஷா சுரேஷ் ஆகியோரை மீட்டு, சூரமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சேலம் வந்த அவர்களது பெற்றோரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.