சவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக

தமுமுக

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காரைக்காலிலிருந்து வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு வந்த தாஜீந்நிஷா என்ற சகோதரி உடல்நலக் குறைவினாலும் வேலை பளுவினாலும் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஊர் செல்ல உதவி செய்யும்படி ஜித்தா மாநகர தமுமுகவை நாடினார்.

உடனே மாநகர செயலாளர் ராஜா முஹம்மது, இந்தியத் தூதரகத்தை அணுகி சகோதரியின் வழக்கு விபரத்தை சேகரித்து பிறகு தலைமை சிறைச்சாலையில் இச்சகோதரியின் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து பிறகு முறையாக பாஸ்போட்டில்  EXIT அடித்துக் கொடுத்தார். மேலும் தமுமுக ஜித்தா மாநகர நிர்வாகிகள் இலியாஸ் மற்றும் ராஜா முஹம்மது உடனிருந்து கடந்த 5.5.2017 அன்று தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இந்த சகோதரியை ஊருக்கு அனுப்பும் சேவையில், ஜித்தா தமிழ் சங்க நிர்வாகி சகோதரர் சிராஜ் மற்றும் தமுமுக ரியாத் மண்டல செயலாளர் நூர் முஹம்மத் ஆகியோரின் வழிகாட்டுதலைப் பெற்று ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜித், மாநகர தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஆலோசனையுடன் மாநகர செயலாளர் ராஜா முஹம்மது செய்து முடித்தார். மேலும் இச் சகோதரிக்காக செய்யப்பட்ட செலவுகளை காரைக்கால் அல்முஃமின் உதவும் குழு மற்றும் ஜித்தா மாநகர தமுமுக பகிர்ந்து கொண்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!