தேவக்கோட்டையில் 139வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ்

9.4.2017 அன்று சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமுமுகவின் 139வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நகர தலைவர் கி முகம்மது சேட் தலைமை தாங்கினார்கள், வரவேற் புரை நகர மமக துனை செயலாளர் ராவுத்தர் நைனா அவர்கள். இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் செய்யது முகம்மது கிராஅத் ஓதி நிகழ்ச்சி துவங்கியது. சிறப்புரையாக மாநில தலைவர் வி.பி ஜவாஹிருல்லா அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் கவுஸ்பாஷா அவர்களும் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்களும் கலந்துக்கொண்டார்கள். 139 அவசர ஊர்தியை தலைவர் வழங்க அதை நகர மருத்துவ சேவை அணி செயலாளர் செய்யது அபுதாகிர் பெற்றுக்கொண்டார்.

தமுமுக சுற்று சூழல் அணியின் சார்பாக 1000 இலவச மரகன்றுகள் வழங்கப்பட்டது, (தமுமுக) இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக., இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் சரியான பதில் எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன . இப்பொதுக்கூட்டம் மற்றும் அவசர ஊர்தி அர்பணிப்பு போன்ற அனைத்து வேலைகளையும் மாவட்ட பொருளாளர் ஷஹிஹூல் பர்கி அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள் நகர பொருளாளர் றி லியாகத் அலிகான் அவர்களின் நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.