மகத்தான சேவையில்  தமுமுக ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

நாகை மாவட்டம்  குத்தாலம் எடத்தெருவைச் சேர்ந்தவர் மாதவ பிள்ளை மகன் அறிவாளன்(வயது 55) சவூதி அரேபியா நாட்டில்  பத்தா  பகுதியில் குடிநீர் வினியோக லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். 16.03.2017 அன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். 

இந்த நிலையில் அவரது  குடும் பத்தினர் சவூதியின் பத்தா கிளை ம.ம.க உறுப்பினர் ஜெனார்தனன்  மூலம்  ரியாத் தமுமுக சகோதரர்களை அணுகி உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தனர். ரியாத் மத்திய_மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக இறந்தவரின் உடல் 6.4.2017 அன்று விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இறந்த சகோதரரின் உடலை சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்ட  திருவள்ளுர் கிழக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் அம்பத்தூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் சொந்த ஊரான குத்தாலத்திற்கு அனுப்பி வைத்தனர். 

குத்தாலம் வந்த இறந்தவரின் உடலை நாகை வடக்கு மாவட்ட தமுமுக செயலாளார் சேக் அலாவுதீன் மற்றும் ரியாத் மண்டல பொருளாளர் சீர்காழி ஜர்ஜீஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிர்வாகிகள் விடைப்பெற்றனர். இறந்த அறிவாளனுக்கு கார்குழலி என்ற மனைவியும்,இரண்டு மகள்களும் உள்ளனர்.