தேங்காய் பட்டிணத்தில் தமுமுகவின் 134வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ்

அனைத்து சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 134 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக 28.01.2017 அன்று தேங்காய்பட்டணத்தில் நடைபெற்றது.

தேங்காய்பட்டணம் தமுமுக கிளை செயலாளர் அப்சல் தலைமை வகித்தார். தமுமுக மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட் கான் மற்றும் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர்காதர் மைதீன் ஆகியோர் துவக்க உரை நிகழ்த்தினார். 

கலச்சாரப்பள்ளி தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, அருமனை வட்டார கிருஸ்துவ இயக்கத்தின் நிர்வாகி அருமனை ஸ்டீபன், சிறிமிவிலி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் குளச்சல் ஷபீக், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாஸ்டர் சி.யி.செபா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் நி.ரவீந்திரன் ,மேதகு ஆயர் மார்த்தாண்டம் மறை மாவட்டம் வின்சென்ட் மார் பவுலோஸ், மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் நொலஸ்கோ, மற்றும் மனித விழிப்புணர்வு சக்தி டாக்டர் பி.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

அதனைத் தொடர்ந்து தமுமுக மாநில செயலாளர் பழனி பாரூக், கர்நாடக மைனாரிட்டி சேர்மன் ராபர்ட் கிறிஸ்டோபர், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர்  வழக்கறிஞர். ஹென்றி டிபேன் மற்றும் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கிளைப் பொருளாளர் என்.ஷாசின் நன்றி கூறினார்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.