சென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டி சென்னை மெரினாவில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள் அறவழி போராட்டம் நடத்தினர்.

இரவு பகல் பாராமல் கிடைத்த உணவை சாப்பிட்டு வந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக தாய்மார்கள் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளுடன் மெரினாவில் கடற்காற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல்  கலந்து கொண்டார்கள்.  இவர்களுக்கு தமுமுக வின் அவசர ஆம்புலன்ஸ் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு பகலாக களத்தில் நமது ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது.

இறுதியாக காவல் துறை மாணவர்களை கலைக்கும் நிலைக்கு வந்து  தடி அடி வரை நடத்தி விட்டார்கள் அப்போது,  காயம் அடைந்த மாணவர்கள் தாய்மார்கள் காவல் துறையினர் என 20க்கும் மேற்பட்ட நபர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டனர்.