செங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் டிச.30, 2016 அன்று என்றும் நம் நினைவில் பாபர் மசூதி மற்றும் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மமக மாவட்ட பொருளாளர் முஹம்மத் ரியாஸ் தலைமை தாங்கினார் தமுமுக மாவட்ட செயலாளர் ஜமால் மமக மாவட்ட செயலாளர் நசிர் தமுமுக மாவட்ட பொருளாளர் கலிமுல்லாஹ் தமுமுக மாவட்ட துனை செயலாளர்அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மமக மாவட்ட துனை செயலாளர்  கி.ஸி.சான் முஹம்மத் வரவேற்புரை நிகழ்த்தினார் தமுமுக நகர செயலாளர் நவித்கான் தொகுத்து வழங்கினார். தமுமுக மூத்த தலைவர் ஹைதர்அலி தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,‌ மமக மாநில அமைப்பு செயலாளர்அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். செங்கம் பகுதியை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஒன்றிய செயலாளர் இம்ரான் நன்றியுரை நிகழ்த்தினார்.