தலைமைச் செயற்குழு உறுப்பினர் வை.அப்துல் ரஹீம் காலமானார்

தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் இராயபுரம் வை. அப்துல் ரஹீம் அவர்கள் கடந்த நவம்பர் 25 அன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65. இவர் மக்கள் உரிமை வெளியிட்டாளர் வை. சிராஜுத்தீனின் மூத்த சகோதரர் ஆவார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலம் முதல் சகோதரர் அப்துல் ரஹீமும் அவரது சகோதரர்களும் குடும்பத்தினரும் தமுமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு சேவையாற்றி வந்தனர்.
இராயபுரம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டு செயல்படுவதற்கு இவரும் இவரது சகோதரர்களும் பெரிதும் காரணமாக இருந்தார்கள்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாகவும் அப்துல் ரஹீம் பணியாற்றி வந்தார். 2007ல் தமுமுகவின் பரிந்துரையால் அப்போதைய திமுக அரசு அப்துல் ரஹீம் அவர்களை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக நியமித்தது. எல்லாம் வல்ல இறைவன் இவரது பிழைகளை பொறுத்து உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.