தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசியலில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் பரோல் அரசியலின் முத்தாய்ப்பாக சசிகலா தமிழகத்தில் ஐந்து நாட்கள் இருந்து திரும்பி இருக்கிறார்.தமிழகத்தின் அரசியலில் அவ்வப்போது புதுப்புது அத்தியாயங்கள் மையம் கொண்டு புயலாகி விடுவது வழக்கம். தற்சமயத்திலோ பரோல் அரசியல் விசுவரூபம் எடுத்துள்ளது. அதிமுகவின் முக்கூறுகள் தற்போது இருகூறுகள் என உருமாறி உள்ளன. நீண்ட நெடிய காலமாக தமிழக அரசியல் களத்தில் சுடச்சுட விவாதிக்கப்பட்ட பேரறிவாளன் பரோல் தற்போது சாத்தியமாகி மேலும் ஒரு நீட்டிப்பு பெற்றுள்ளது. அரசுப் பணியில் காட்டிய அரசியல் என்று இதனைக் கருதலாம். இதன் மூலமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்துவிட்டார்.

செப்.21,2017 அன்று சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ. திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர் முத்தரசன். முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் உரையாற்றினர்.

ஸ்கவுட் (The Scout Association) என்று அழைக்கப்படுகின்ற தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கம், மூன்று லட்சம் மாணவர்களையும் 500க்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியன்று தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநரை ஜனாதிபதி நியமனம் செய்தார். மராட்டிய மண்ணில் கொலுவிருக்கும் அவர், தன் "எஜமானர்கள்" உத்தரவுக்கு ஏற்ப அவ்வப்போது சென்னைக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். கடந்த ஓராண்டில் ஆளுநரின் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உரியவை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு வழங்கப்படும் ஆணைகள் அப்படி. அவற்றை மீறிச் செயல்படுவதற்கு அவர் என்ன சுர்ஜித்சிங் பர்னாலாவா?

"தமிழகத்தின் அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்" என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பின் மூலமாகத் திராவிட இயக்கத்தவர்களே தங்களை பாஜகவிடம் சரணளித்து விட்டுத் தமிழர்களைத் தவிப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

மனிதகுலம் தன் ஒவ்வொரு அறிவியல் பரிணாம வளர்ச்சியின் போதும் நன்மைகளுக்கு சமமாக பல சிக்கல்களையும், சீர்கேடுகளையும், ஆபத்துகளையும் சந்தித்துக் கொண்டு தான் வந்திருக்கிறது. சமீபகாலமாக ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி, இன்றைய இளைஞர்களைக் குறிப்பாக ‘டீன் ஏஜ்’ என்று சொல்லக்கூடிய இளைய பருவத்தினரின் ஆளுமை தன்மையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.