ரஜினிகாந்த் எதை எதிர்பார்த்துத் தன் சர்ச்சைப் பேச்சுகளை உதிர்த்தாரோ அது மிக எளிதாகவே நிறைவேறி விட்டது. அவரின் பேச்சுத் தமிழக மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் வாயிலாக அவரின் அடுத்த படத்தைப் பார்த்துவிட வேண்டும், தம் பணத்தின் ஒரு பகுதியை அவரின் படத்துக்குச் செலவு செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.

உள்குத்துக் கலாசாரம் என்பது உலகப் பிரசித்தம்என்றாலும் தமிழகத்தில் அதன் தாண்டவம் தாங்கமுடியாது. அரசியலிலோ அதன் தாக்கம்உச்சத்தையே முட்டும்.

‘‘மணல் அள்ளுவது 3ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும்’’என்று ‘அதிரடி’ அறிவிப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கிறார். ‘‘அடுத்த மூன்றாண்டுகள் வரைத் தங்குதடையின்றி ஆற்றுமணலை அள்ளி, அரசகுலத்துக்கு ஈடாகக் கொழித்தும் கொள்ளுங்கள்’’என்று அப்பட்டமாகக் சொல்வதற்கு உரிய வாசகங்களை முதல்வர் எவ்வளவு நாசூக்காகப் பேசி இருக்கிறார் பாருங்கள்.

இந்துமுன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் சுபேர், ஷாஹீல் ஹமீது, அப்துல் அஜிஸ், ராஜா உசேன், சீனி நைனார் முகமது ஆகிய 5 முஸ்லிம் இளைஞர்களை 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு  இது புனையப்பட்ட வழக்கு என்று உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருக்கிறது.

வின்னில் ராக்கெட்டை செலுத்தி தமிழர்களுக்குப் பெருமை ஈட்டியவர் மறைந்த விஞ்ஞானியும் முன்னாள் மக்கள் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்படுகின்ற மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவர் மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளார். அந்த நாயகன் ஏவுகணை வடிமைத்தார். நாம் சந்தித்த இந்த விஞ்ஞானியோ உலகிலேயே சிறிய வகையான கையடக்க செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். அதற்கு ‘கலாம் சாட்’ என பெயர் சூட்டியுள்ளார். வெறும் 64 கிராம் எடையுள்ள இந்த கலாம் சாட், அடுத்த மாதம் ஜூன் 21ம் தேதி நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் அமெரிக்ககவின் வெர்ஜீனியா மாகாணத்தின் எஸ்.ஆர்.4 வழிதடத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மாநிலங்களிலிருந்து எம்.பி.பி.எஸ்., இடங்களையும் (15 விழுக்காடு), மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான இடங்களையும் (பொதுத் தொகுப்புக்குக் கொண்டு சென்ற மத்திய அரசு அதற்காக ஒரு நுழைவுத் தேர்வை (ழிணிணிஜி) நடத்தி வருகிறது.

"தர்ம யுத்தம் நடத்தினேன். முதல் வெற்றி முகிழ்ந்து விட்டது" என்று பன்னீர்செல்வம் அவசர அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.‘தர்ம யுத்தம்’ என்று அவர் கூறினாலும் அரசியல் நோக்கர்கள் சிலர் இதை ‘மர்ம யுத்தம்’ என்றே வருணிக்கின்றனர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த காலகட்டத்தின் தகவல்கள் இருட்டில் சுருண்டு கிடக்கின்றன. இந்த மர்ம யுத்தம் தான் பன்னீர் செல்வத்தின் முதல் அஸ்திரம். மர்மத்துக்கு யார் காரணமோ அவரே இதை ‘மர்மம்’ என்று கூறி அரசியல் நடத்துவது தான் வேடிக்கை. 

More Articles ...