காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ் மனைவி மரியம் வயது 60. கடந்த ஒருசில வருடங்களாக உடல்நலம் குன்றிய மரியம் 14.06.2017 அன்று இறந்து விட்டார். மரணம் அடைந்த மரியமின் பெற்றோர்கள் வாரணவாசிக்கு அருகில் உள்ள கிராமமான தொல்லாழி என்ற கிராமத்தில் பூர்வீக குடிமக்களாக வாழ்ந்தவர்கள். கடந்த காலங்களில் அப்பகுதியில் சுற்றி இருக்கும் முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் இல்லாததால் தொல்லாழி கிராமத்தில் அடக்கம் செய்து வந்தனர்.

பதினொன்றாம் வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் தற்பொழுது நிம்மதி இழந்து பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு- எண்ணெய் கிணறுகளை சீரமைப்பதற்காகவும் புதிய குழாய்களை பதிப்பற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன ராட்சத இயந்திரங்களை கண்டு அச்சமடைந்த இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கினர். ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் எரிவாயு-எண்ணெய் கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மீத்தேன் எடுப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள வெல்கூர் கிராமத்தில் சர்வே எண் 18/1 ல் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஈத்கா (பள்ளிவாசல்) 80% கட்டிட பணி முடிந்ததுள்ளது.

தெஹல்கா... தேசத்தையே திகைக்க வைத்தது. பாஜகவின் அரக்கரூபத்தைத் தோலுரித்துக் காட்டியது. குஜராத் மாநிலத்தில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய பாஜகவினரின் ரகசிய பாசிசத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது தெஹல்கா.

திகார் சிறையில் முடங்கிக்கிடந்த தினகரன் இப்போது ஜாமீனில் வெளிவந்து தமிழக அரசியலைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். தினகரனைச் செய்தியாளர்கள் ‘தினத்தரன்’ என வருணிக்கின்றனர். ஏன் எனில் தினந்தோறும் செய்தி தருபவர் என்பதாகும்.

கலைஞரின் சட்டப்பேரவை வைர விழாவின் முதல் அம்சம், "கலைஞரின் குடும்பக் கொழுந்துகளில் ஒருவராக ராகுல் காந்தி தன்னை இணைத்துக் கொண்டது தான்’’.தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசிய அவசரம் நேர்ந்த போதெல்லாம் கலைஞரின் ராஜதந்திர அணுகுமுறை பல சரித்திரச் சாதனைகளுக்கு வித்திட்டு இருக்கிறது. அந்த வழியில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு விழாவும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி இருக்கிறது. இதனால் மு.க.ஸ்டாலினின் அரசியல் தகுதியானது அடுத்த அந்தஸ்தின் உயரத்துக்கு எட்டி இருக்கிறது. இதனை தேசியத் தலைவர்கள் பேசிய கருத்துக்களே பறைசாற்றுகின்றன.

More Articles ...