டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினம்: திமுக சிபிஎம் மற்றும் விசி தலைவர்களுடன் சந்திப்பு

தமிழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது.

1992 டிசம்பர் 6ல் பாபர் பள்ளிவாசல் உச்சநீதிமன்றத்தின்உத்தரவை புறந்தள்ளி இடிக்கப்பட்ட பயங்கரவாத அராஜகம் நடைபெற்ற தினமாகும். டிசம்பர் 6 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கெடுக்கவுள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொள்வதற்கான அழைப்பை அளிப்பதற்காக இன்று தமுமுக தலைவர் பேராசிரியர் எம் எச். ஜவாஹிருல்லா மற்றும் தமுமுக பொதுச் செயலாளர் பி எஸ் ஹமீத ஆகியோர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாளயத்தில் திமுக செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொள்ள அழைப்பு விடுத்தனர். இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. ஜி ராமகிருஷ்ணண் அவர்களயும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்களையும் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொள்ள அழைப்பு விடுத்தனர்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.