வறுமையிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மோர் வியாபாரி மகள் ஆசிகா

தமிழகம்

கல்விக் கூடங்கள் தனியார்மாயமாகி வரும் சூழ்நிலையில் கல்வியை பொருளதார கண்ணோட்டத்தில் அணுககூடிய காலகட்டத்தில் தனது குடும்ப வறுமை, தேர்வுக்கு முன்பு நடந்த தன் தாயின் மரணம் என அடுக்கடுக்கான துன்பங்களை கலைந்து ஒரு அரசு மாநகராட்சி பள்ளியில் படித்து +2வில் அதிக மதிப்பெண் 1101 எடுத்த ஆசிகா பேகம் என்ற மாணவியின் சாதனையை மக்கள் உரிமை சார்பாக பாராட்டி அவரை நேரில் சந்தித்து கலந்துரையாடினோம்.

மோர் வியாபாரி மகள்

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை அடுத்த காமராஜ் நகர் விதியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆசிகா பேகத்தின் தந்தை அப்துல் ரஹிம்.ஆவார். மார்கெட் பகுதியில் மோர் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் மாலை நேரங்களில் நிலக்கடலையை வீதிவீதியாக விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தனது ஏழ்மையை பொருட்படுத்தாது தனது மகளின் படிப்பை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆசிகா பேகம் தான் படித்த மாநகராட்சி பள்ளியில் 1200 மதிப்பெண்ணுக்கு 1101 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். இத்துடன் அந்த பள்ளியின் வரலாற்றிலே அதிக மதிப்பெண் பெற்ற மாணவி என்ற சாதனைனையும் படைத்துள்ளார். மேலும் அதே மாநகராட்;சி பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் 473 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

மருத்துவராகுவதே இலட்சியம்

எனது தாயின் சிகிச்சையே என்னை மருத்துவராக்க தூண்டியது என்கிறார். ஆசிகா பேகம். மருத்துவராக வேண்டுமெண்பதே தனது இலட்சியம் என்றும் தனது தாயாரின் விருப்பமும் எனவும் தெரிவித்தார்.

மருத்துவத்துறையில் கார்டியலாஜி துறையை தேர்ந்தெடுத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி ஆற்றுவது எனது இலக்கு என தெரிவித்த அவர் மருத்துவராக வேண்டும் என்ற வேட்கைக்கு காரணம் சென்னை இராஜிவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று மரணித்த தனது தாயாருக்கு கொடுக்கபட்ட சிகிச்சைகளும் அதனை நேரில் பார்த்த அனுபவமும் தான் என்கிறார். அந்த மருவத்துவமனைக்கு சிகிச்சைக்காக அன்றாடம் வந்து செல்லும் ஏழை எளிய மக்களின் நிலையை நேரில் பார்த்தே தான் மருத்துவராக வேண்டும் இலட்சியத்தை தனக்குள் விதைத்துக் கொண்டதாக மனம் உருகி தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு உதவிய ஆசிரியர் மற்றும் அகரம் அறக்கட்டளை

தனது படிக்கும் திறனை ஒன்பதாம் வகுப்பிலிருந்து பார்த்த தனது கணித ஆசிரியர் திரு.பன்னீர்செல்வம் என்பவரே பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கும் +2 பொது தேர்வுக்கும் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அவரே தேர்வுகள் முடிந்த பிறகு அகரம் பவுண்டேசனில் தொடர்பு கொண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார் என்றும் நம்மிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் தங்கி ஒரு மாதம் காலம் பயிற்சிக்கு பிறகு தான் தேர்வு எழுதுவதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து கொடுத்து தன்னை தேர்வு எழுத வைத்தவர் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்றும் நம்மிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருக்கும் அகரம் தொண்டு நிறுவனத்திற்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்வதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கான கேள்வி தாளை அனுக மிகவும் சிரமபட்டதாகவும் தனது படிப்புக்கு அப்பாற்ப்பட்ட கேள்விகள் அதிகம் தொகுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாற்றினார்.

அரசு பள்ளி மாணவர்ளுக்கு அறிவுரை

அரசு பள்ளிகளில் படித்து வரும் உங்களை போன்ற சக மாணவ மாணவிகளுக்கு உங்களது அறிவுரை என்ன என்று கேட்ட போது கல்வியில் தனியார் பள்ளி அரசு பள்ளி என்ற வேறுபாட்டை பொருட்படுத்தாது பாடத்தை மனனம் செய்யாமல் புரிந்துணர்வோடு படித்தாலே நிச்சயம் நான் பெற்ற இந்த வெற்றியை அனைத்து மாணவர்களும் பெற முடியும் என தன்னம்பிக்கையும் உற்சாகமாக தெரிவித்தார்.


தான் படித்த மதுரம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை தவிர வேறு யாரும் எனக்கு பாராட்டுகளோ உதவிகளோ செய்ய முன்வரவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் எனது மருத்துவ கனவை நிறைவேற்ற இந்த ஏழை மாணவிக்கு அரசு தானாக முன்வந்து தனது கல்விக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென்றும் மேலும்; தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென்றும் கோhpக்கை விடுத்தார்.

ஆசிகா பயின்ற மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்புக் கொண்டு கேட்ட போது அந்த மாணவி மாநாகராட்சி பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர் என்ற அடிப்படையில் ரூ25,000 மாநகராட்சி நிர்வாகம் சார்பாக விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தாரர். வருடா வருடம் இந்த பள்ளியின் சேர்க்கை குறைந்து வந்த நிலையில் ஆசிகா பேகத்தின் வெற்றி அரசு பள்ளியில் முன்னேற்றத்திற்கும் மாணவர் சேர்க்கைக்கும் பெறும் உதவியாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

இந்த கூடுதல் மதிப்பெண்னுக்கு காரணம் மாவட்ட கல்வி அலுவலர் முயற்சியில் திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து 30 பேர் கொண்ட அந்த மாணவ குழுவுக்கு சையது முர்துஷா மேல்நிலை பள்ளியில் +2 தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயிற்சியே தனது மதிப்பெண் அதிகரிக்க காரணம் என்றும் இந்நேரத்தில் அந்த சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்ட கல்வி மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

வறுமை வாட்டிய போதும், அரசு பள்ளியில் பயின்ற போதும், இடையில் பெற்ற தாயை இழந்த நிலையிலும் அற்பணிப்பு இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு ஆசிகா பேகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவருக்கு உதவிச் செய்து அவரது மருத்துவர் கனவை நனவாக்க சமுதாய தனவந்தர்கள் முன்வரவேண்டும்.