பொதுத் தேர்தலின் போது தான் அரசியல் கட்சிகள் அணிவகுத்துக் களமிறங்கும் என்ற தமிழக அரசியல் சூத்திரத்தை முறியடித்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே மெகா கூட்டணிக்கு வழிகிடைத்து இருக்கிறது.
இடைத்தேர்தல் களம் ஜெயலலிதாவின் மறைவு நாளில் சூடுபிடித்து இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் பல கோடி மக்களை சாட்சியாக வைத்து பகலில் அரங்கேற்றப்பட்ட பச்சைப் பயங்கரவாதமான பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த டிசம்பர் 6 அன்று, தமிழகம் மீண்டும் கொந்தளித்து அடங்கியுள்ளது.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்து விட்டாலும், நீதி கிடைக்கும் வரை இந்த நெடிய போராட்டம் தொடர்ந்தே தீரும் என்பதை, பயங்கரவாத எதிர்ப்பு நாளில் பங்கேற்ற பல லட்சம் இதயங்கள் துடிப்போடு நிரூபித்துள்ளன.

எம்.ஜி.ஆரால் துளிர்ந்த... ஜெயலலிதாவால் தளிர்ந்த இரட்டை இலை, தற்போது ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இணையர்களால் சருகாகி விடுமா என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

நம் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்த கால கட்டத்தில் 1976ம் ஆண்டு கோட்டையில் உள்ள தலைமைக் செயலகத்தில் அப்போதைய தமிழக ஆளுநர் சுகாதியா செய்தியாளர் கூட்டத்தில் பேசியதும், அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடியதும் நினைவு படுத்தும் வகையில் கோவையில் தமிழகத்தின் இன்றைய ஆளுநர் புரோகித் ஆய்வு அமைந்துள்ளது.

“மார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாய பிளவுக்கும் பகைமைக்கும் காரணமாகலாமா?“ என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 23 அன்று சென்னை பிரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியின் இஸ்லாமிய அறிவியல் (தமிழ்) துறையின் சார்பாக விறுவிறுப்பான ஆய்வரங்கம் நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த ஷபானா அஞ்சும்(27) என்ற மாணவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

"பழநிசாமியான முதல் அமைச்சர், தன்னிடம் சமரசம் செய்துகொண்ட பன்னீர் அணியினருக்கு மொட்டை அடித்து வருகிறார்" என்று ஓ.பி.எஸ். தரப்பினரின் புலம்பல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

More Articles ...