கடந்த 2005 இல் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பிய ஷொராபுதீன் போலி மோதல் வழக்கு முறையாக விசாரிக்கப்பட மோதல் கொலை நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த மோதல் கொலை நடைபெற்றபோது குஜராத் காவல்துறைக்கு பொறுப்பு வகித்த இருந்தவர் இன்றைய பாஜகவின் தலைவர் அமித் ஷா என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஹர்திக் பட்டேலின் PAAS (Patidar Anamat Andolan Samiti ) அமைப்புக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

சுல்தான் மொயூனுத்தீன் சவுக்கத் மராட்டிய மாநில மருத்துவ இளநிலை இறுதி தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். 14 தங்கப்பதக்கங்களை குவித்து நாசிக்கில் உள்ள வசந்த் பவார் கல்லூரிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக தொடர்ந்து பொய்யான பரப்புரைகள் செய்து கேரளா மாநிலம் முழுவதும் பதட்டத்தை சங்பரிவார் சக்திகள் ஏற்படுத்தி வந்தன. ஆனால் முஸ்லிம்களை சரமாரியாக குற்றம் சாட்டும் இவர்கள் கேரளா முழுவதும் கர்வாப்ஸி என்ற பெயரிலும் மதமாற்றம் நடத்தியுள்ளனர்.

புல்லட் ரயில் நாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு அடையாளம் . இந்திய வல்லரசு பாதைக்கு அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறி என மோடி மற்றும் அவரது அடிப்பொடிகள் பலராலும் சிலாகிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கோலாகலமான கால் கோள் விழா குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாத்ரியில் பசு குண்டர்களால் வெறித்தனமாக வேட்டை யாடப்பட்ட அஹ்லாக்கின் குடும்பம் தங்கள் குடும்ப தலைவரை கொன்று தீர்த்த படுபாவிகள் தண்டிக்கப் படவேண்டும் நீதி கிடைக்கவேண்டும் என்று இன்று வரை காத்து கிடக்கும் நிலையில் இரக்கமற்ற பசு குண்டர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க காவி முகாம் மும்முரமாக இறங்கிய செயல் நீதி நாடும் அனைவர் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளிக்கொட்டி விட்டு சென்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜகவிடம் இருந்தே தொகுதியை கைப்பற்றி விட்டது காங்கிரசு.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.