குஜராத்தில் மீசை வைத்ததற்காக தலித் மக்கள் மீது கொடூர தாக்குதலும்கர்பா நடனம் பார்த்ததற்காக தலித் இளைஞர் படு கொலை செய்யப்பட்டார்.தலித் இளைஞர் பியூஸ் பார்மர் மீசை வைத்ததற்காக தாக்கப்பட்டார். அவரது மைத்துனர் திகந் மகரியாவும் தாக்கப்பட்டார்.

நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் இந்தியப் பொருளாதார நிலையை வீழ்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதாக எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. ஆனால் பாரதீய ஜனதாவின் கூடாரத்திலிருந்தே ஒரு எதிர்ப்புக் குரல் பலமாக ஓங்கி ஒலித்திருப்பது ஆளும் பாஜகவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் வாஜ்பாய் அமைச்சரவையின் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பலமாகவே தன் கருத்தைப் பதிவு செய்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

விலை வாசி ஏறுவதைப்போல வலை வாசிகளின் எண்ணிக்கையும் அலப்பறையும் அதிகரித்து வருகின்ற்ன. மோடி லட்ச ரூபாய் மதிப்பில் கோடி துணி உடுத்தி கோடிகளை கொட்டி புல்லட் ரயில் தொடக்க விழாவில் தொண்டையை செருமிக்கொண்டு மேரே பாயோ பெஹனோ என்று ஆரம்பிக்கும்போதே மாப்பிளே இவர் பொய் சொல்லப்போறார் ஜப்பான் தயாரிப்பு புல்லட் ரயில் பெய்லியராமே நெட்டில் பார்த்தேன் என்று அந்த திட்டத்திற்கே ஷட்டரை போடும் நிலை.

கேரளாவில் இஸ்லா த்தை தழுவிய மருத்துவர் அகிலா என்ற ஹாதியாவின் திருமணம் கேரள உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டு, அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அணுப்பிவைக்கப்பட்டு தனியறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது. இதனிடையே கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் கேஹர் தலைமையிலான அமர்வு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தியா நவீன அடிமைகளின் இல்லமாக இருப்பதாகவும் கட்டாய படுத்தப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் கொத்தடிமைகள் அபலைப் பெண்கள் கட்டாயமாக திருமணம் செய்யப்படும் கொடுமையும் சிறார் தொழிலாளர்கள், , மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி கள் குறித்து ம் சர்வ்தேச தொழிலாளர் அமைப்பும் வாக் பிரீ பவுண்டேஷனும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் வெளியிடப்பட்டுள்ளது.

முகமது அஹ்லாக்கின் கொலை - மோடி ஆட்சியில் பசு குண்டர்களின் முதல் படு கொலை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை . அந்த கொடூரம் நிறைந்த நாளை அவரது மனைவி விவரிக்கிறார். "அந்த லவுட் ஸ்பீக்கர்அலறியது. அவரது தூக்கத்தை கலைத்து போட்டது. அந்த அறிவிப்பில் பசுவை ஒரு முஸ்லிம் வீட்டில் கொன்று இறைச்சியை வைத்து இருக்கிறார்கள் என அஹ்லாக்கின் வீட்டை குறிப்பிட்டு அந்த ஒலிபெருக்கியில் கோயில் பூசாரி உசுப்பேற்றி விட்டதை தொடர்ந்து தெருக்களில் வெறிக்கூட்டம் திரண்டது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு ஹதியா என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். ஷபின் ஜஹான் என்ற முஸ்லிம் வாலிபரை அவர் திருமணமும் செய்து கொண்டார். இதனை லவ் ஜிஹாத் என்று கூறி உச்சநீதிமன்றம் இந்த மதமாற்றம் குறித்து தேசீய புலனாய்வு நிறுவனத்திற்கு (என்ஐஏ) பணித்துள்ளது. இந்த பின்னணியில் ஹதியாவின் மதமாற்றத்தை மேற்குலகில் இஸ்லாத்தை தழுவும் வெள்ளை நிற பெண்களுடன் ஒப்பிட்டு ஸ்கிரால் டாட் இன் இணையத் தளத்தில் ஏஜாஸ் அஸ்ரப் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் நிறைவு பகுதி இங்கே தரப்படுகிறது. - ஆசிரியர்

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.