மாடு தேசிய அரசியலின் மையமாக மாறி இருக்கிறது.பசு இந்துக்களின் புனித சின்னம் என்று வாதிடும் இந்துத்துவாவினர் இப்போது ஒட்டு மொத்த மாட்டையும் குத்தகைக்கு எடுத்து விட்டனர்.மாட்டை இறைச்சிக்காக அறுக்க நேரடி தடைவிதிக்காமல் கொள்ளைப்புறமாக பூட்டுப்போடும் வேலையாக சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் இறை வழிபாட்டுக்காக விலங்குகளை அறுக்கவும் தடை விதிப்பதற்கு அறிவிப்பாணை ஒன்றை மே 23 ஆம் நாள் வெளியிட்டது.

யூனியன் பப்லிக் சர்வீஸ் கமிஷன் என்ற மத்திய ஆட்சிப்பணிகளுக்கான ஐ ஏ எஸ், ஐ எப் எஸ் , ஐ பி எஸ் பணிகளுக்கான இறுதி கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 10, 99 மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களில் முஸ்லிம்கள் 50 பேர் ஆவர்.

நாங்கள் மாட்டுக்கறியையோ அதனை வெட்டும் இடங்களையோ தடை செய்யமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அறிவித்திருக்கிறார். மாறாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இறைச்சி விலையை குறிப்பாக மாட்டு இறைச்சி விலையை குறைப்போம் என அந்த பாஜக தலைவர் அறிவித்திருந்தார். இவ்வாறு சொன்னவர் மேகாலயா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பெர்னார்டு மராக் ஆவர்.

மனிதர்களை விட மாடு முக்கியமென்றால்நாடு நாசமாய்ப் போய்விட்டது சுவாமி விவேகானந்தர்

பெரோஷாபாத்தில் துப்பாக்கிகள் , வெடி மருந்துகள் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பஜ்ரங்க தளத்தினர் ஆயுத பயிற்சி ஒத்திகை எடுத்துக்கொண்டே சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த சட்ட விரோத ஆயுத படையெடுப்புக்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பு கொடுத்துள்ள அவலம் நடந்துள்ளது.

பிரதமர் மோடி அமீரகம் செல்லும்போது தனது சொந்த ஊர் காரரான குஜராத்தியுமான மரக்கறி சமையல்காரரை சஞ்சீவ் கபூரை உடன் அழைத்து குஜராத்தின் சுத்த பத்தமான சைவ உணவு அவருக்கு வழங்கப்பட்டது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பெருமிதப்பட்டுக்கொண்டார். அமீரகம் சென்றும் கூட சைவ உணவை அருந்திய பிரதமரின் செயலைக்கண்டு அவருக்கு பெருமை தாங்க முடியவில்லை போலும்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.