காஷ்மீரிகளுக்கு சிறப்பு குடிஉரிமை வழங்கும் சட்டம் 35 ஏ வை நீக்க மத்திய பாஜக அரசு முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. முதல்வர் மெகாபூபா முப்தி பிரதமருடன்பேசிய பின்னர் மத்திய அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று மோடி கூறியதாக தெரிவித்தார். ஆனால், காஷ்மீரில் இதற்கு இப்போது கடுமையான எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது."சட்டப் பிரிவு 35 ஏ வை நீக்கினால் காஷ்மீர் கொந்தளிக்கும்"என்று பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

ஹைதராபாத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தசரா நாளன்று அதிரடிப்படை அலுவலகத்தின் முன்பாக ஒரு தற்கொலை குண்டுதாரி தனக்கு தானே குண்டுகளை வெடிக்க செய்து நிகழ்வில் அந்த மனித வெடிகுண்டும் அலுவலக காவலாளியும் பலியாயினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹர்க்கத்துள் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹ§ஜி ) என்ற பயங்கரவாத பங்களாதேஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் 10 தேதி நம்பள்ளி நீதிமன்றத்தால் 10 நிமிட தீர்ப்பு வாசிப்பிற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு கடும் நிபந்தனைகளை கொண்ட சட்ட விதிகளை மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017 என்ற பெயரில் கடந்த மே 23 ம் தேதியன்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயலும் போக்கு மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது . இந்திய முஸ்லிம்களின் குறிப்பாக வடஇந்திய முஸ்லிம்களின் பெருமை மிகு கல்வி நிறுவனங்களாக அலிகார் முஸ்லிம். பல்கலைக்கழகமும் , ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மும் திகழ்கின்றன.

அயோத்தியில் பாபர் பள்ளி இடிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடக்க இருக்கிறது.இப்போது,மத்தியிலும் 16 மாநிலங்களிலும் அசுர பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக,பாபர் பள்ளி இருந்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பாரதீய ஜனதா அரசு நடக்கிறது.அயோத்தியில் முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்தியநாத் வந்த உடன் வக்பு வாரிய குழுவை கலைத்தார்.

முகலாயர்கள் வரலாற்று பாடபுத்தகங்களில் அகற்றப் பட்டுள்ளனர். தி வைர் ஆங்கில ஊடகம் இது குறித்து அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளது.

ஆகஸ்ட் 1 இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் வழக்குறைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.