கேரளாவில் இஸ்லா த்தை தழுவிய மருத்துவர் அகிலா என்ற ஹாதியாவின் திருமணம் கேரள உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டு, அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அணுப்பிவைக்கப்பட்டு தனியறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது. இதனிடையே கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் கேஹர் தலைமையிலான அமர்வு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு ஹதியா என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். ஷபின் ஜஹான் என்ற முஸ்லிம் வாலிபரை அவர் திருமணமும் செய்து கொண்டார். இதனை லவ் ஜிஹாத் என்று கூறி உச்சநீதிமன்றம் இந்த மதமாற்றம் குறித்து தேசீய புலனாய்வு நிறுவனத்திற்கு (என்ஐஏ) பணித்துள்ளது. இந்த பின்னணியில் ஹதியாவின் மதமாற்றத்தை மேற்குலகில் இஸ்லாத்தை தழுவும் வெள்ளை நிற பெண்களுடன் ஒப்பிட்டு ஸ்கிரால் டாட் இன் இணையத் தளத்தில் ஏஜாஸ் அஸ்ரப் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் நிறைவு பகுதி இங்கே தரப்படுகிறது. - ஆசிரியர்

கான்பூர் மாவட்டம் கல்யாண் புரில் உள்ள டெல்லி பப்லிக் ஸ்கூலில் 11ம் படித்து வந்த முஸ்லிம் மாணவர் ஆசிரியர்கள் , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து தன்னை தீவிரவாதி எனக்கூறி சித்திரவதை செய்ததால் தற்கொலை செய்துள்ளார். செப்டம்பர் 23ம் தேதி இரவு உடல்நிலை மோசமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் ஏராளமான தூக்க மாத்திரைகளையும் பிணையிலையும் அருந்தி ஸ்வரூப் நகரி ல் தனது வீட்டில் இருந்து மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார், (இன்னாலில்லாஹி )

மும்பை உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் கிளையில் ஜனார்தன் மூன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனு ஒன்றில் நாக்பூர் பெருநகர மாநகராட்சியின் மக்கள் பணத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் தலைமையக வளாகத்தில் நடைபெறும் பணிகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குற்றவாளிகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் திருந்தி வாழவும், குடும்ப, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், 'பரோலில்' அனுமதிப்பதற்கான விதிகளை மேம்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் ம.பி. மாநிலங்களை எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பறிகொடுக்கும். ஆர் எஸ் எஸ் எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பில் 2017ல் குஜராத்தையும் 2018ம் ஆண்டு மத்திய பிரதேசத்தையும் பாஜக பறிகொடுக்க இருப்பதாக அந்த கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தை கலகப் புலமாக மாற்றினார்கள்.ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் ஜனநாயகப் பண்புகளையும் இடதுசாரி கொள்கைகளையும் வளர்த்து எடுக்கும் தளம்.இங்கு படித்த பலர் அரசின் உச்சமான அதிகாரப் பரப்புகளில் இருந்திருக்கிறார்கள்.இருந்தும் வருகிறார்கள்.தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீத்தாராமன் நேரு பல்கலை கழகத்தில் படித்தவர்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.