உபியில் பாக்.கொடியா? பொய்களை பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு காவல்துறை மறுப்பு

இந்தியா

ஹபீஸ் சயீத்துக்கு ஆதரவாக கோஷம் போட்டு கொண்டாட்டம் . பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டம் என ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பதட்டத்தை உருவாக்கிட சில ஊடகங்கள் செய்த முயற்சி எடுத்த எடுப்பில் தோல்வியில் முடிந்துள்ளது.


மும்பையின் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக குற்றச் சாட்டப்பட்டவரும் ஜமாத்துதாவா என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஹபீஸ் அண்மையில் 297 நாட்கள் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாராம். அதற்காக உத்திரபிரதேசத்தில் லஹிம்பூரில் வாழ்த்துக் கோஷங்களும் கொண்டாட்டங்களும் நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டைனிக் ஜாக்ரன்


உலகில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ஹபீஸ் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து உ.பி.மாநிலம் லஹிம்பூர் கிரியில் பட்டாசுகள் வெடித்து பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் போட்டு கொண்டாடப்பட்டதாக டைனிக் ஜாக்ரன் விஷம செய்தி வெளியிட்டது.


ஹபீஸ் சயீத் விடுதலையை லஹிம்பூர் நகரமே கொண்டாடியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டது.


டைம்ஸ் ஆப் இந்தியா


லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் விடுதலையை லஹிம்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாக செய்தி வெளியிட்ட அந்த ஆங்கில செய்தி ஏடு இந்த தகவல்களை வலது சாரி இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகர் தங்களுக்கு நேர்காணலில் தெரிவித்தார் என்றும் கூறியது. அது தொடர்பாக எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் அந்த சங் பிரமுகர் கூறியதாக அந்த ஏடு குறிப்பிட்டது. பாகிஸ்தான் கொடிகள் அங்கு அசைக்கப்பட்டன. என்றும் ஹபீஸ் சயீத் ஜிந்தாபாத் என்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் வாழ்த்தொலிகள் முழங்கின என்றும் பொய்களை அள்ளிக்கொட்டியது.


லஹிம்பூர் இமாம் அஷ்பாக் காதிரி

லஹிம்பூர் பள்ளிவாசல் இமாம் அஷ்பாக் காதிரி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுத்தார் நாட்டுக்கு எதிராக யாரும் கோஷம் போடவில்லை என்கிறார். டிசம்பர் 2ம் தேதி மீலாது நபி என்ற பெயரில் நடைபெறும் விழாவுக்காக பச்சை நிறக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அதை வைத்து வதந்திகளை விஷமிகள் பரப்பிவிட்டனர் என்கிறார்.

ஊரெங்கும் இதே பேச்சாக பரப்பி பெரும் கலவர சூழலை ஏற்படுத்த மதவாத பாசிசர்கள் முயன்ற வேளையில் இது தொடர்பாக உடனடியாக விசாரிக்க காவல்துறையினர் அனுப்பிவைக்கப்பட்டனர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பட்டதா? ஹபீஸ் ஆதரவாளர்கள் உள்ளனரா இது மிகவும் அபாயகரமான விஷயமாச்சே என வெகுண்டு தீவிர விசாரணைக்கு உத்திரவிட்டதாக லஹிம்பூர் மாவட்ட நீதிபதி ஹிரி ஆகாஷ் தீப் தெரிவித்தார்.


கண்காணிப்பாளர் சென்னப்பா

இது தொடர்பாக உண்மையை கொண்டு வரும் நோக்கத்துடன் ஆல்ட் நியூஸ் ஊடகம் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி கேட்டபோது இது தொடர்பானவை அனைத்துமே வதந்தி ஆதாரமற்ற குற்றசாட்டு என்கிறார். நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக சில விஷமிகள் இது போன்று வதந்திகளை பரப்பி அரசியல் லாபம் அடைய முயல்கின்றனர் என்கிறார்.

பச்சை என்றாலே பாகிஸ்தானா ?

வலைத்தளங்களில் இது போன்று பரப்பி பதற்றம் ஏற்படுத்திடுபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருகிறது என லக்னோ ஐஜி ஜெய் நாராயண் சிங் தெரிவித்தார் . தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சொன்னவர்கள் யாருமே இப்போது காணமுடியவில்லை ஒரே ஓட்டமாக ஓடி தலைமறைவாகிவிட்டனர். அப்படி ஒரு வீடியோ இருந்தால் அதனை முகநூல் , கட்செவி உள்ளிட்ட ஊடகங்களில் பரப்பி அதனை வைரலாக்கி இருப்பார்களே என்கிறார் காவல்துறை ஐஜி . பச்சை என்றாலே பாகிஸ்தான் கொடி என்று நினைக்கும் பேர்வழிகளை நினைத்தால் பச்சை நிறத்தில் கொடிகளை வைத்துக்கொண்டு இந்தியாவில் செயல்படும் ஏராளமான கட்சிகளை இவர்களுக்கு தெரியாதா? அட பைத்தியக்காரர்களா என்று உங்களுக்கு திட்ட தோன்றுகிறதல்லவா?
இவர்கள்தான் ஹபீஸ் சயீதை ரகசியமாக சந்தித்தவர்கள், தாவூத் இப்ராஹீமை சந்திக்க தூது அனுப்பியவர்கள், நவாஸ் சரீப்புடன் கொஞ்சி குலாவுபவர்கள் ஆனால் இவர்களின் சங் அடிப்பொடிகள் அப்பாவி முஸ்லிம்களுடன் பாகிஸ்தானை தொடர்பு படுத்தி பிளவு அரசியலில் குளிர்காய நினைக்கிறார்கள். அதில் தோல்வியைத்தான் தழுவுகிறார்கள். அந்தோ பரிதாபம்.