கல்விநிலையங்களில் பயங்கரவாத வகுப்புகள் கல்வியாளர்கள் கவலை!

இந்தியா

மாநில அரசு கல்விக்கூடங்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பு வாத வெறியூட்ட அரசின் முழு ஒத்துழைப்புடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன இது எதிர்கால இந்திய இளைய சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயலாகும் என அபாய அறிக்கை வாசிக்கின்றனர். குழந்தை நல ஆர்வலர்கள்.

குழந்தைகள் அமர்வு கட்டாயம்

ஹிந்துத்துவாவை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு வகுப்புகள் எனும் பெயரில் மூளை சலவை செய்ய இந்த வகுப்புகளை பயன்படுத்துகிறார்கள் ஜெய்ப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்திரவின்படி அமர்வுகள் கண்டிப்புடன் நடத்தப்படுகின்றன.

ஹிந்து மாணவிகளிடம் முஸ்லீம் மாணவர்கள் தீவிரவாதிகள் அவர்களோடு சேரக்கூடாது என திசை திருப்பப்படுகிறார்கள் இது போன்ற குற்ற சாட்டுக்கள் எழுந்தபோதும் ஹிந்து கலாச்சார பண்பாட்டை கற்றுக்கொள்ள அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது என மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரத்தன் சிங் தி வைர் இணைய தத்தில் தெரிவித்தார்.

ஹெச்.எஸ்.எஸ்.எப்.

இது சென்னையை தளமாகக்கொண்டு இயங்குவதாகும் . இது ஆர் எஸ் எஸ் உடன் தொடர்பு உடையது ராஷ்டிரிய சேவா பாரதி என்ற அமைப்பும் இதை போன்றதுதான் வெளிப்பார்வையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும் எல்லாமே ஒன்றுதான் அவர்கள் அரசியல் குறிக்கோளை நோக்கியே பயணிக்கிறார்கள் ஹச் எஸ் ஸ் எப் இன் ஒருங்கிணைப்பாளர் குன்வந் கோத்தாரி என்னதான் சொன்னாலும் அதனை யாரும் நம்ப தயாராக இல்லை .

லவ் ஜிஹாத் பற்றிய குறிப்பேடுகள்

லவ் ஜிஹாத் குறித்தும் முஸ்லீம் வாலிபர்கள் பற்றியும் சரமாரியாக அவதூறு பரப்பியும் கையேட்டினை அளிக்கிறார்கள் இந்த குறிப்புகளை வாங்காவிட்டால் சரமாரியாக வசை தான் . லவ் ஜிஹாத் குறித்து பாடம் நடத்துபவர் கூறும் கட்டுக்கதைகளை கவனிக்காமல் இருந்தால் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர் சவுத்தமால் குப்த என்பவர் பொங்கி தீர்த்து விடுவாராம்.கான் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த கரீனா கபூர் உள்ளிட்ட எடுத்துக்காட்டுகளை கூறி ஹிந்தி திரையுலகின் பிரபல கான்களை குறித்தும் கடுமையான வாசகங்களை வைத்து பகைமை பரப்புரைகளை செய்கிறார்கள். முஸ்லிம் இளைஞன் என்பவன் தீவிரவாதி, கடத்தல்காரன், தேசத்துரோகி, பாகிஸ்தான் ஆதரவாளர் என அந்த குறிப்பேடுகள் முழுவதும் நிரப்பி பிஞ்சு நெஞ்சங்களில் தவறான புரிதல்களை பதியவைத்து விடுகின்றனர். லவ் ஜிஹாத் என்பதே பொய்யான ஒரு உள்நோக்கம் கொண்ட கட்டுக்கதை என்பதும் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் யாவரும் அறிந்ததே .

பசு தேசிய விலங்கா?

பசுவை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்க மேலும் பசுவை கொன்றவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கவேண்டும் என்றும் பாரதீய கிராந்தி மஞ் அமைப்பின் சிந்தாரா கோத்தாரி கூறியதோடு அடுத்து சொன்ன ஒரு கருத்து கோடிக்கணக்கான இந்தியர்களையும் கொந்தளிக்க வைப்பது. அதாவது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் பசுக்குண்டர்களை தவறாக சித்தரிக்கக்கூடாதாம். நம்முடைய அம்மாவை காப்பாற்ற இந்த அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்களாம் இதெல்லாம் மாணவர்களுக்கு எதற்கு என்று யாரும் கேட்க முடியாது ஆடுகளை எருமைகளை நாம் வீட்டில் வளர்க்கலாம்.அவை பால்கூட நமக்கு தருகிறது. ஆனால் அவைகளை நாம் அம்மா என்று அழைப்பதில்லை பசுக்களை மட்டுமே ம்மா ம்மா என்று அழைக்கிறோம் என்று செம்மையான பொருள் பொதிந்த (?) உளறல்களை மாணவர்கள் மனதில் திணிக்கிறர்ர்கள்

நடமாடும் கபர்ஸ்தான்களாம்

மரக்கறி உணவை கண்டிப்பாக சாப்பிடவேண்டும். மாமிச உணவு ஒரு போதும் சாப்பிடக்கூடாது அதனால் நோய்கள் ஏற்படும் என்று சொன்னதோடு மாமிச உணவு சாப்பிடுபவர்கள் நடமாடும் கபர்ஸ்தான்களை போன்றவர்கள் என உஜ்ஜயினியில் இருந்து வந்த சாமியார் பாபா ஜெய் குருதேவ் என்பவர் பிதற்றியுள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு இளம் சிறார்களுக்கு யாதொரு பயனும் இல்லை. ஆனாலும் தீய நோக்கோடு விஷ விதையை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் இவர்களது கூட்டத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் அதன் நடுவே அசோகா சக்கரம் காணாமல் போயிருந்தது. பவுத்த மதத்தை சேர்ந்த அசோக மன்னனின் சின்னமான சக்கரம் தேவையில்லை என நினைத்து தேசியக்கொடியில் இருந்தே அசோக சக்கரத்தை அகற்றி விட்டார்கள். இவர்கள் நாட்டை எங்கு நோக்கி நகர்த்துகிறார்கள் புரிகிறதா?