கேள்விகளை எழுப்பி இருக்கும் நீதிபதியின் மரணம்

இந்தியா

கடந்த 2005 இல் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பிய ஷொராபுதீன் போலி மோதல் வழக்கு முறையாக விசாரிக்கப்பட மோதல் கொலை நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த மோதல் கொலை நடைபெற்றபோது குஜராத் காவல்துறைக்கு பொறுப்பு வகித்த இருந்தவர் இன்றைய பாஜகவின் தலைவர் அமித் ஷா என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.

தொடக்கம் முதலே உச்ச நீதிமன்ற ஆணைக்கு மாற்றமாகவே இந்த வழக்கு கையாளப்பட்டு வந்தது.வழக்கு விசாரணையை ஒரே நீதிபதியே விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்பத் என்பவரும் பின்னர் லோயா என்பவரும் விசாரணை செய்து வந்தனர்.தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த அமிதா ஷா வை கண்டித்த மறுதினம் நீதியரசர் உத்பத் மாற்றப்பட்டு லோயா நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில் சக நீதிபதியின் மக்களின் திருமண நிகழ்ச்சிக்காக வேறு இரு நீதிபதிகள் வற்புறுத்தலின் பேரில் நாக்பூர் சென்ற நீதியரசர் ஹர்கிஷன் லோயா டிசம்பர் 1 2014 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.


இரண்டு வருடங்களை மௌனம் சாதித்து வந்த அவரது குடும்பத்தினர், லோயாவின் சகோதரி மகள் நுபுர் எழுப்பி உள்ள சில சந்தேகங்கள் மூலம் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மாரடைப்பால் மரணம் ஏற்பட்டதாக கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாலும் ,நெஞ்சு வலியால் இ சி ஜி வசதி கூட இல்லாத தாண்டியா மருத்துவமனைக்கு ஆட்டோ வில் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் நீதிபதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது என பலவேறு சந்தேகங்களை முன்வைக்கும் நூபுர்,கூராய்வு சோதனைக்கு நீதிபதியின் வருகைக்கு காத்திராமல் அவரின் தூரத்து உறவினர் ஒருவரிடம் கையெழுத்து பெறப்பட்டு அவசர கதியில் கூறாய்வு நடைபெற்றுள்ளது.


மேலும் நீதிபதியின் சட்டையில் ரத்த துளிகள் காணப்பட்டதோடு,அவரது கால் சட்டையின் பெல்ட் முறுக்கிய நிலையில் இருந்துள்ளது.மேலும் அவருடன் விருந்திற்கு சென்ற இரு நீதிபதிகளும் ஒன்றரை மாத காலத்திற்கு மரணம் அடைந்தவரின் குடும்பத்தினரை சந்திக்காததும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.மரணம் அடைந்தவரின் உடைமைகள் பற்றிய "பஞ்சநாமாவில்" பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.. லோயாவின் கைபேசி அவரின் நண்பர் ஒருவரால் குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்படுகிறது.சாதாரணமாக இதுபோன்ற தருணங்களில் காவல்துறையினர் மூலம் ஒப்படைக்கப்படும்.இதன் மூலம் நீதிபதி அலைபேசியில் பேசிய விபரங்கள் அழிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.மருத்துவமனைக்கு கொண்டு செல்லு போதும்,மரணம் அடைந்த உடனே குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காதது, ஆவசரமாக கூராய்வுக்கு உத்தரவு இடப்பட்டது,நீதிபதிகள் தங்கி இருந்த ரவி பவனத்தில் ஆட்டோவைத் தவிர வேறு வாகனமே இல்லாதது என சந்தேகங்கள் ஏராளமாக வரிசை கட்டி நிற்கிறது.லோயாவின் சகோதரி தொழில்முறை மருத்துவராவார்.


அவர் குறிப்பிடுகையில் தனது சகோதரருக்கு அஜீரண கோளாறு தவிர வேறு எந்த குறைபாடும் இல்லாத நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருப்பதை நம்ப முடியவில்லை என குறிப்பிடுகிறார்.


சந்தேகங்கள் ஏராளம் வரிசை கட்டி நிற்பதை பார்க்கும் போதும் யாருடைய வழக்கை லோயா விசாரணை செய்து வந்தாரோ அவர்களின் பின்னணி மற்றும் கடந்த கால வரலாறுகள் நீதிபதியின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் கொள்ள செய்கிறது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.