குஜராத் தேர்தல் உற்சாகத்தில் காங்கிரஸ்

இந்தியா

வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஹர்திக் பட்டேலின் PAAS (Patidar Anamat Andolan Samiti ) அமைப்புக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . முதல் கட்டமாக 77 இரண்டாவது பட்டியலில் 13 என மொத்தம் 90 வேட்பாளர்களை கொண்ட இப்பட்டியலில் பட்டேல் சமூகத்தின் இட ஒதுகீட்டுகாக போராடி வரும் ஹர்திக் பட்டேலின் இயக்கத்திற்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ளது காங்கிரஸ். காங்கிரசின் அதிரடி வியூகங்கள் பாஜகவை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


ஏற்கனவே ஹர்திக் பட்டேல் பாஜகவை எதிர்த்து களமாடி வருகிறார். ஹர்திக்கை பழி வாங்குவதாக கூறிக் கொண்டு அவர் தனியறைலிருக்கும் வீடியோவை வெளியிட்டு அவமானப்பட்டது பிஜேபி. இதனால் ஹர்திக் பிஜேபிக்கு எதிராக கடும் வேகத்துடன் சுழன்று வருகிறார்.


எனினும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறைவு என அவரது கட்சியினர் சற்று சுணக்கமடைந்திருந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகசூழலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களாக 20 பட்டேல் இனத்தவருக்கு தொகுதிகள் வழங்கியுள்ளது. இதனால் பட்டேல் சமூகத்தின் வாக்கு வங்கி காங்கிரஸ் பக்கம் முற்றிலும் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் செல்வாக்காக உள்ள அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துல்லாதார்.. மேலும் தலித் சமூகத்தின் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறார்.


இந்நிலையில் பாஜகவை எதிர்த்து களமாடிவரும் ஹர்டிக் பட்டேலும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.


முதற்கட்ட வேற்பாளர் பட்டியலில் மூன்று முஸ்லிம்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகம், பட்டேல், முஸ்லிம், தலித் ஆதிவாசி மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் கூட்டமைப்புக்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருவது குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பை பிரகாசமக்கியுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.