புல்லட்டாவது ரயிலாவது ஆர்.டி.ஐ.யில் வெளியான அதிர்ச்சி டூபாக்கூர்கள் பற்றிய டுமீல் ரிப்போர்ட்

இந்தியா

புல்லட் ரயில் நாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு அடையாளம் . இந்திய வல்லரசு பாதைக்கு அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறி என மோடி மற்றும் அவரது அடிப்பொடிகள் பலராலும் சிலாகிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கோலாகலமான கால் கோள் விழா குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் பிரதமர் மோடி செப்டம்பர் 4 ம் தேதி நாட்டினார்.

இது, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம். 1,10,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு, ஜப்பான் கடனுதவி செய்கிறது. 81 சதவிகிதத் தொகையை ஜப்பான் வழங்க உள்ளது. இந்த அதிவேக புல்லட் ரயில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும். இந்த அதிவேக புல்லட் ரயில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை (508 கி.மீ) சுமார் 2 மணி, 7 நிமிட நேரத்தில் கடக்கும் என்று கூறப்பட்டது. 


புல்லட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘நமஸ்கார்’ என்று கூறி, தன் உரையைத் தொடங்கினார். ’'நண்பர் பிரதமர் மோடி, ஒரு தொலைநோக்குத் தலைவர். அவர், புதிய இந்தியாவை உருவாக்கிவருகிறார். அதில், ஜப்பானையும் கூட்டாளியாகச் சேர்த்துள்ளார். புதிய இந்தியா உருவாவதை நாங்கள் ஆதரிக்கிறோம். மோடியும் நானும் இணைந்து 'ஜெய் ஜப்பான்- ஜெய் இந்தியா' கனவை நினைவாக்குவோம்’ என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் போக்குவரத்து மிக முக்கியம். 1964ல் புல்லட் ரயில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமானது. சர்வதேச அரங்கில் பிற நாடுகளுடன் போட்டி போட புல்லட் ரயில் போன்ற நவீன வசதிகள் தேவை’ என்றார்.இது எல்லாமே கேட்கவும் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் அதன் உண்மை தன்மை குறித்து கேள்வி கேட்டால் அவர்களை புழுதி வாரி தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட அவர்கள் அண்மையில் அம்பலப்பட்டுப்போன நிகழ்வு ஒன்று வெளிவந்துள்ளது.


ஆர் டிஐயில் வந்த அதிர்ச்சி அணுகுண்டுகள்

அதுல் ஜி செஹ்தா என்பவர் குஜராத்தின் ஜூனாகாட் பகுதியை சேர்ந்தவர் அவர் மத்திய வெளியுறவுத்துறையிடம் செப்டம்பர் 14ல் இந்தியா வந்த ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயில் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதா என தகவல் அறியும் உரிமை சட்டம் 2015ன் படி வினா அனுப்பினார். அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் போடப்படவில்லை என அக்டோபர் 13ம் தேதி மறுப்பு தெரிவித்து பதில் அனுப்பியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை .


மேலும் இந்த பதிலில் முழுமையான திருப்தி இல்லையெனில் இந்த நோட்டிஸ் கண்ட 30 நாட்களுக்குள் வெளியுறவுத்துறை இயக்குனர் சுர்ஜித் கோஷ் இடம் மேல்முறையீடு செய்து செய்து கூடுதல் தகவல் பெற்று கொள்ளலாம் என ஜப்பானுக்கான இந்திய வெளியுறவுத்துறையின் உதவி செயலர் நிஹரிகா சிங் பதில்கடிதம் அனுப்பியுள்ளார் . டுபாக்கூர் கோஷ்டியின் மானம் புல்லட் ரயிலில் பறக்கிறது.

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் ?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.