மராட்டியம் : எம்.பி.பி.எஸ் இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற சுல்தான் 14 தங்கப்பதக்கங்களை குவித்து அசத்தல்

இந்தியா

சுல்தான் மொயூனுத்தீன் சவுக்கத் மராட்டிய மாநில மருத்துவ இளநிலை இறுதி தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். 14 தங்கப்பதக்கங்களை குவித்து நாசிக்கில் உள்ள வசந்த் பவார் கல்லூரிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.


நடுத்தர ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த சுல்தான் மும்பை மாநகருக்கு அருகே பல்கரை சேர்ந்தவர் சிறிய வயதில் இருந்தே மருத்துவர் ஆவேன் என கனவு கண்ட அவர் குடும்ப சூழல் காரணமாக முதலில் பொறியியல் கல்லூரியில் சேர சென்றார். அந்நிலையில் பல்கரில் இருந்து அழைப்பு வந்தது. தனது லட்சியமான கனவை துரத்தும் விதமாக சி . இ டி நுழைவுத்தேர்வுக்கு தயாரானார். அதில் 172 மதிப்பெண்கள் பெற்று டாக்டர் வசந்த் பவார் கல்லூரியில் சேர்ந்தார். சாதனை செல்வரானார்.
அண்மையில் பல்கலைக்கழக 17வது பட்டமளிப்பு விழாவில் மராட்டிய மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தலைமையில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.