அஹ்லாக்கை கொன்ற பசு குண்டர்களுக்கு அரசுவேலை - பாஜக ஆட்சியில் கொடிகட்டி பறக்கும் நீதி

இந்தியா

தாத்ரியில் பசு குண்டர்களால் வெறித்தனமாக வேட்டை யாடப்பட்ட அஹ்லாக்கின் குடும்பம் தங்கள் குடும்ப தலைவரை கொன்று தீர்த்த படுபாவிகள் தண்டிக்கப் படவேண்டும் நீதி கிடைக்கவேண்டும் என்று இன்று வரை காத்து கிடக்கும் நிலையில் இரக்கமற்ற பசு குண்டர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க காவி முகாம் மும்முரமாக இறங்கிய செயல் நீதி நாடும் அனைவர் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளிக்கொட்டி விட்டு சென்றுள்ளது.

மத்திய அரசின் அனல் மின் நிலையத்தில் வேலை தாத்ரியில் தேசிய அனல் மின் நிலையத்தில் கொலையாளிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க பாஜக வாக்குறுதி வழங்கியுள்ளது. கடந்த 2015 செப்டமபர் 28ம் தேதி 52 வயது முகமது அஹ்லாக் மாட்டுக்கறி அவரது வீட்டு குளிர்பதன பீரோவில் வைத்திருந்ததாக கூறி அவரது ஊர்காரர்களால் அண்டை வீட்டுக்காரர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.


கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 15 பேரையும் கடந்த மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்த தாத்ரி எம் எல் ஏ தேஜ்பால் நாகர் இவர்களுக்காக அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் வேலை வாய்ப்புக்காக பரிந்துரை செய்து பணி ஆணை பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.


இவர்களில் சிலர் முன்பு அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக இருந்துள்ளனர் அஹ்லாக் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கும் சிறை சாலைக்கும் சென்றதில் அவர்கள் வேலையை இழந்தனர் .

நிறுவன நுழைவாயிலில் தற்கொலை முயற்சி

வேலை பறி போனதை அடுத்து நீரஜ் என்பவன் அனல் மின் நிலையத்தின் நுழைவாயிலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான் படுகாயமடைந்த அவன் பின்னர் சத்தும் போனான் அவனுக்கு நீதி (!) கிடைக்க பாஜகவினர் போராட்டம் என்ற பெயரிலும் பேச்சு வார்த்தை எனும் பேரிலும் தேசிய அனல் மின் நிலைய அதிகாரிகளை மிரட்ட தொடங்கியுள்ளனர்


அஹ்லாக் கொலை செய்யப்படவில்லை அகிலேஷ் அரசின் சதியாம் தாத்ரி எம்.எல்.ஏ.தேஜ்பால் நாகரிடம் கொலை காரர்களுக்காக அரசு நிறுவனத்தில் பணி பெற்று கொடுக்கும் அளவுக்கு உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலாமா என சிலர் கேட்டதற்கு அவர் ஆவேசத்துடன் அவர்கள் கொலை காரர்கள் அல்ல. அவர்கள் அப்பாவிகள் உணர்ச்சி வசப்பட்டு தாக்கினார்கள் அவ்வளவு தான் அஹ்லாக் மாட்டுக்கறி வைத்து இருந்ததை ஒப்புக்கொண்டார் என்றும் பச்சை புளுகை புதிதாக புகுத்தினார் அஹ்லாக் தாத்ரியில் இறக்கவில்லை மருத்துவமனையில் தான் இறந்தார். அகிலேஷ் யாதவின் சதியால் தான் அந்த இளைஞர்களின் மீது வழக்கு போடப்பட்டது என கொலையாளிகளுக்கு வாதாடுவதை பார்க்கும்போது நீதியை வளைத்து எத்தகைய அநீதியையும் செய்யதுணிந்து விட்டதை காணமுடிகிறது. அங்கு ஒரு சங்கீத் சோம், இங்கு ஒரு தேஜ்பால் முசாபர் நகர் படுகொலைகளில் தொடர்புடைய சங்கீத் சோம் போல் தாத்ரி படுகொலையில் இந்த தேஜ்பால் நாகர் என்ற எம் எல் ஏ கொலையாளிகளுக்காக களம் இறங்குகிறார். வெறுப்புணர்வு பழியுணர்வு கொலையுணர்வு கொண்டோரை ஊட்டி வளர்க்கும் பாசிச வாதிகள் நாட்டை விரக்தியின் விளிம்பில் தள்ளி விட்டார்கள் அவர்களுக்கென்று இருக்கும் நியாய தர்ம அகராதியில் மஸ்ஜிதை இடித்தவர்கள் தான் துணை பிரதமர், இனப்படுகொலையின் சூத்ர தாரிதான் நாட்டின் உச்ச பட்ச அதிகார வர்க்கம் அந்த அடிப்படையில் பார்த்தால் அஹ்லாக் படுகொலை யாளர்களுக்கு மத்திய அரசு பணியான அனல் மின் நிலைய வேலை இன்று ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும் நாளை பணி நிரந்தரமாகும் வகையில் கடமையாற்ற தெரியாதவர்களா? இந்த புண்ணியவான்கள்(?)


மாலேகான் புகழ் புரோஹித்துக்கு சம்பளம் கொடுத்தவர்கள் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் தொடர்ந்து சிறையில் இருக்கும் காலத்தில் கூட ஊதியம் பெற்று வந்தார் எந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும். ஒரு தரப்பாருக்கு கொலை செய்தால் தண்டனை கிடையாது .மாறாக நோயில் இறந்தாலும் அரச மரியாதை (அஹ்லாக்கின் கொலையாளிகளில் ஒருவனானான ரவின் சிசோடியா சிக்குன் குனியா வந்து செத்து போன போது அவனது உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா வந்து மரியாதை செலுத்தி சிசோடியாவை ஒரு மாவீரன் என்றும் தியாகி என்றும் புகழ்ந்ததை இந்த நாடு பார்த்து கொண்டுதான் இருந்தது இன்றும் கவனித்து கொண்டுதான் இருக்கிறது. சரியான தீர்ப்பை ஜனநாயக முறையில் தீர்ப்பை வழங்க நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த நம்பிக்கை மட்டுமே தற்போது அநீதி இழைக்கப் பட்டவர்களின் ஒரே ஆறுதலாக உள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.