குஜராத்தில் தலித் மீசை வைத்தால் அடி உதை- கோயிலில் நடனம் பார்த்தால் படுகொலை

இந்தியா

குஜராத்தில் மீசை வைத்ததற்காக தலித் மக்கள் மீது கொடூர தாக்குதலும்கர்பா நடனம் பார்த்ததற்காக தலித் இளைஞர் படு கொலை செய்யப்பட்டார்.தலித் இளைஞர் பியூஸ் பார்மர் மீசை வைத்ததற்காக தாக்கப்பட்டார். அவரது மைத்துனர் திகந் மகரியாவும் தாக்கப்பட்டார்.

கோலா கலமா? கொலை களமா?

குஜராத்தில் 9நாள் நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலமாக திமிலோகப்படும்.குஜராத் மாநிலமே ஆனந்தத்தில் மூழ்கினாலும் அங்கு வாழும் தலித் மக்கள் கொண்டாட முடியாது.இந்த சோகத்தின் தொடர்ச்சியைத்தான் செப்டம்பர் 25மற்றும் 29 தேதிகளில் குஜராத் கண்டது.காந்திநகர் மாவட்டத்தில் தர்பார் சமூகத்தினரால் தலித்துகள் தாக்கப்பட்டனர் அவர்கள் செய்த குற்றம் என்ன மீசை வைத்தது தான்,செப்டம்பர் 29ம் தேதி 4 உறுப்பினர்களை தலித் குடும்பம் பட்டான்மாவட்டத்தில் தாக்கப்பட்டது. கோயில் விழாவில் நடந்த நடன விழாவில்அவர்கள் இருந்ததால் தாக்கப்பட்டனர்.அக்டோபர் 1ம் தேதி ஆனந்த் மாவட்டத்தில் தலித் இளைஞர் படேல் சமூகத்தினரால் அடித்து கொல்லப்பட்டார் அவர் செய்த குற்றம் உயர் சாதி கொண்டாட்டத்தில் நடனவிழாவை பார்த்தது தான்.


நடந்தது என்ன?

ஆனந்த் மாவட்டத்தில் போர்சாத் வட்டத்தில் உள்ள பதரான்யா கிராமத்தில்20வயது ஜெய்ஷ் சோலங்கி தனது நண்பர்களுடன் கோயிலுக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் நடன நிகழ்ச்சியி காண சென்றனர்.முன்னதாக சென்றுஇருக்கும் குடும்ப பெண்களையும் நடனவிழா முடிந்த பிறகு சேர்த்தே அழைத்து வந்து விடலாம் என திட்டமிட்டு சென்ற ஜெயிஸ் சோலங்கியிடம் சஞ்சய் பட்டேல் என்ற ஆதிக்க சாதி ரவுடி வம்பு வாக்குவாதம் செய்கிறார்.உங்களுக்கு இங்கு என்ன வேலை?என்று கேட்டதிற்கு ஜெய்ஷ்சோலங்கி நாங்கள் கர்பா (நடனம் ) பார்க்க வந்து இருக்கிறோம் என்று சொன்னபோது சாதி குறித்த இழிவான ஒரு வசை சொல்லை கூறி தலித்துகளுக்கு இங்கு இடமில்லை இடத்தை விட்டு வெளியேறு என கூறி அவமத்தித்துளார்.சிறிது நேரத்தில் ஒரு ரவுடி பட்டாளத்துடன் திரும்பி வந்த சஞ்சய் படேல் என்பவன் இவர்கள் திரும்பி செல்லாததை கண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். ஜெய்ஷ் தலையோடு சேர்த்து சுவற்றில் மோதியுள்ளனர் உடன் இருந்தவர்களும் தாக்கப்பட்டனர். ஜெய்ஷ் சோலங்கி நினைவிழந்தார். உடனடியாக போர்சத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார் அங்கு பரமுகசுவாமி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறுகின்றனர். மீண்டும் 16 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அந்த மருத்துவமனைக்கு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறிவிட்டனர்.

படிப்பை பாதியில் விட்டு குடும்பத்தை காப்பாற்ற 10 வகுப்பில் இடை நின்று குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனியார் நிறுவனத்தில் வாட்ச் மேன் வேலை பார்த்து வந்த அந்த 20 வயது இளைஞர் சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டான். 8பேர் ஒரு மைனர் உள்பட கைது செய்யப்பட்டனர்.நாங்கள் அவர்களை 7 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டோம். ஆனால் நீதிமன்ற்ம் அனுமதி மறுத்து நீதிமன்ற காவலில் போர்சத் சப்ஜெயிலில் அனுப்பி வைத்து விட்டார்கள் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெ என் தேசாய் கூறினார். வன்கொடுமை தடுப்பு சட்டம்,மற்றும் இந்திய தண்டனை சட்டம்143,323,302, 504 பிரிவின்படிவழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் நீதி எப்போது என்பது கேள்விக்குறியே.


சாதிய வெறியாட்டத்தின் வரலாறு

2000ம் ஆண்டில் பாதரன்யா கிராமத்தில் ஆதிக்க சாதி வெறியாட்டத்தை வரலாறுகுறித்து வைத்துக் கொண்டுள்ளது. 4000 மக்களை கொண்ட அந்த ஊரில் 45குடும்பங்கள் மட்டுமே தலித்துகள்.2000 ம் ஆண்டில் 500 பேர் கொண்ட படேல் வெறித்தனமாக தாக்கினர் என்றார் உள்ளூர் தலித் கிரண் சோலங்கி 2002ம் ஆண்டில் தலித்துகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி தலித்மக் களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்போதைய ஜெய்ஷ் கொலையில் தொடர் புடைய சஞ்சயின் தந்தை தக்கோர்பாய் படேல் என்பது அங்கு சாதி வெறி ஆணவம் எந் அளவு தலை விரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும் .


2011ல் பட்டேல்களின் தெருக்களில் சென்றதற்காக தலித்மக்கள் தாக்கப்பட்டனர் தலித்குழந்தைகள் கிரிக்கெட் விளையாட அனுமதியில்லை. பட்டேல் தெருக்களில் புத்தாடை அணிந்து செல்லமுடியாது தலித் மக்கள் மீசைவைத்தால்?


செப்டம்பர் 25 ம் தேதி பியூஸ் பரமர் என்ற 24 வயது இளைஞன் மீசை வைத்ததற்காக தாக்கப்பட்டார். 30வயது சட்டக் கல்லாரி மாணவர் குருனாள் மஹேரியா மீசை வைத்ததற்காக தூக்கி வீசப்பட்டு தாக்கப்பட்டார்.காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று தாக்கப்பட்டார் தர்பார் சமூகத்து காரன் என எண்ணிக் கொண்டாயா?என சொல்லிக்கொண்டு தாக்கியுள்ளனர் அதற்கு பதிலடியாக சமூக வலைத்தளங்களில் மீசை முறுக்கி தலித் இளைஞர் களின் புகைப்படங்களாக போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.


இது ஒருபுறமிருக்க பார்மர் மற்றும் குருனாள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறியர்கள் ஜாமீனில் வெளிவந்து விட்டனர் அக்டோபர் 3ம் தேதி இது நடந்துள்ளது பார்மரின் 17வயது உறவினர் பிளேடால் குத்தி கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.


பள்ளி விட்டு வீடு திரும்பும் போது இரு சக்கர வாகனங்களில் வந்த ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கியுள்ளனர். குஜராத் மாநிலம் முழுவதும் சாதி வெறி கோர தாண்டவ மாடுகிறது அச்சத்தின் பிடியில் குஜராத் தலித் மக்கள்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.