இந்தியா நவீன கொத்தடிமைகளின் தொட்டிலா?

இந்தியா

இந்தியா நவீன அடிமைகளின் இல்லமாக இருப்பதாகவும் கட்டாய படுத்தப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் கொத்தடிமைகள் அபலைப் பெண்கள் கட்டாயமாக திருமணம் செய்யப்படும் கொடுமையும் சிறார் தொழிலாளர்கள், , மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி கள் குறித்து ம் சர்வ்தேச தொழிலாளர் அமைப்பும் வாக் பிரீ பவுண்டேஷனும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் வெளியிடப்பட்டுள்ளது.

நவீன அடிமைகள் உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் உள்ளனர் அதில் 25 மில்லியன் பேர் ஆசிய பசிபிக் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.


இது உலக அளவில் ஆவணப் படுத்தப்பட்ட நிலை யில் இது நாட்டை அதன் இமேஜை இழிவுபடுத்தும் முயற்சி என கூறி இதற்கு ஆவண ரீதியில் பதில் கொடுக்க வேண்டும் என இந்திய புலனாய்வு துறையான ஐ பி பிரதமர் அலுவலகம் உள்துறை வெளியுறவுத்துறை, மற்றும் ரா அமைப்புக்கும் எச்சரித்து குறிப்புகள் அனுப்பியுள்ளது. வளர்ச்சிக் குறியீடு 8.7 என்று இருப்பதை தடுக்க கொத் தடிமைகளை, குழந்தை தொழிலாளர்களை, நவீன அடிமைகளாக மனித கடத்தல் காரர்களை வளைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. 2013ல் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை கட்டு மானத்துறையிலும், தொழிற்ச £லைகளில், பண்ணைகளில், மீன்பிடி படகுகளில் ஏன் பாலியல் தொழிலகங்களிலும் கூட நவீன கொத்தடிமைகள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் என்ற கருத்து உலக அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய தரப்பில் கொத்தடிமைகள் ஒழிப்பில் காட்டும் முனைப்பு குறித்து இந்தியா பெரிய அளவில் முன்னெடுப்பு முனைப்பில் இருக்கும் நிலையில் இந்த ஆய்வு கேள்விக்குரியது என ஐ பி ஐயம் தெரிவித்துள்ளது மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சர்வதேச வாக் பிரி பவுண்டேஷன் ஆஸ்திரேலிய சுரங்க தொழில் அதிபர் ஆண்ட்ரு பிராஸ்ட் 2012 ல் தொடங்கியதகவும் அதில் ஹிலாரி கிளிண்டன் , மற்றும் பில்கேட்ஸ் ஆகியோர் நிதி வழங்கியவர்களாகவும் இருந்தனர் என்பதை சுட்டி காட்டி வாக் பிரீ யின் நம்பகத்தன்மை குறித்து ஐ.பி.கேள்வி எழுப்பி உள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.