தீவிரவாதி என அழைத்ததால் மாணவர் தற்கொலை: உபியில் நடந்த கொடூரம்

இந்தியா

கான்பூர் மாவட்டம் கல்யாண் புரில் உள்ள டெல்லி பப்லிக் ஸ்கூலில் 11ம் படித்து வந்த முஸ்லிம் மாணவர் ஆசிரியர்கள் , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து தன்னை தீவிரவாதி எனக்கூறி சித்திரவதை செய்ததால் தற்கொலை செய்துள்ளார். செப்டம்பர் 23ம் தேதி இரவு உடல்நிலை மோசமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் ஏராளமான தூக்க மாத்திரைகளையும் பிணையிலையும் அருந்தி ஸ்வரூப் நகரி ல் தனது வீட்டில் இருந்து மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார், (இன்னாலில்லாஹி )

கலாம் ஆக ஆசைப்பட்டார்


அவர் தனது மரணம் குறித்து எழுதிய கடிதத்தில் ஆசிரியர்களும் முதல்வரும் தன்னை பாகுபாட்டுடன் நடத்தியதாக குறிப்பிட்டார் முதல் அமைச்சர் ஆதித்ய நாத்துக்கு அவர் எழுதிய அந்த கடிதத்தில் முதல்வர் சார் நான் தீவிரவாதியல்ல மாணவன் என எழுதி கல் நெஞ்சினரையும் உருக செய்துள்ளார். மேலும் அவர் சாதாரண மாணவர் அல்ல. அப்துல் கலாம் போன்ற அறிவியல் அறிஞராக ஆசைப்பட்டு அதனை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் படித்த பள்ளி அவரை சந்தேகக்கண் கொண்டே பார்த்தது. தனது பள்ளி புத்தக்கப்பை ஒவ்வொரு நாளும் சோதனை யிடப்பட்டது. வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார வைக்கப் பட்டார். அவர் எந்த சந்தேகத்தை கேட்டாலும் பதில் கிடைக்காது மேலும் அவர் அப்போது வகுப்பறை விட்டே வெளியேற்றப்படுவார். சில ஆசிரியர்களின் தூண்டுதலா ல் பல மாணவர்கள் தன்னை விட்டே விலகியே நின்றதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


புத்தகப்பை சோதனை


இந்த பாகுபாடு குறித்து சொத்து வாங்கி விற்று தொழில் செய்து வரும் அவர் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் ஆசிரியர்கள் சிலரும் மாணவர்கள் பலரும். ஆசிரியர்கள் சொல் கேட்டதால் என் மகனிடம் நட்புடன் பழகவேயில்லை என ஊடகங்களிடம் அவரது தாயார் தெரிவித்தார். அவனது புத்தகங்களடங்கிய பையை தினமும் சோதனை போட்டது அவனை வேதனையில் ஆழ்த்தியது. அவன் துப்பாக்கி கொண்டு வந்து இருப்பான் என்றே பள்ளி நிர்வாகம் சந்தேகண்கொண்டு நடத்தியது. மாவட்ட காவல்துறை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் மீது இ.த. ச. பிரிவு 305 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவுக்காக காத்திருப்பதாக காவல்துறை கூறுகிறது.


தாயார் முன்பும் அவமதிப்பு 


இவர் பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை எனக்கூறி செப்டம்பர் 14ம் தேதி அவர் தாயார் வகுப்புக்கு அழைக்கப்ட்டுள்ளார். வகுப்பில் பலர் முன்னிலையில் தாயார் கடிந்து கொண்டதை சாதகமாக எடுத்துக்கொண்ட ஆசிரியர் மாணவரை சரமாரியாக திட்டியுள்ளார். துப்பாக்கி கொண்டு வந்ததாக அவதூறு கூறி அவமதித்துள்ளார். மாணவரின் கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.


தான் தொடர்ந்து அவமதிக்கப் பட்டு வந்த நிலையில் தாய்மாமாவிடம் தனக்கு நேரும் தொடர் அவமானங்கள் குறித்து கூறியுள்ளார் அவரும் பள்ளிக்கூடம் வந்து பேசிப்பார்த்தும் ஒன்றுமே நடக்கவேயில்லை என்ற நிலையில் மாணவர் தனது முடிவை தானே மேற்கொண்டு விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னையை பள்ளி நிர்வாகம் சரியாக கையாண்டிருக்கவேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


மன நல சிகிச்சை


இவ்வாண்டு ஏப்ரல் மாதம் காசியாபாத்தில் 4 வயது சிறுவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவன் அருகில் அமர சக மாணவ குழந்தைகள் மறுத்துள்ளன. நான் அவன் அருகில் உட்காரமாட்டேன் ஏனெனில் அவன் முஸ்லிம் என மாணவன் கூறிய உடன் பள்ளி ஆசிரியர் இது குறித்து பள்ளி முதல்வரிடம் தெரிவிக்கவே உடனடியாக அருகில் அமர மறுத்த பையனின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு உங்கள் பையனுக்கு கவுன்சிலிங் கொடுத்து அழைத்து வாருங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் 11 ம் வகுப்பு மாணவன் படிக்கும் பள்ளியில் நடைபெறவில்லை. இங்கு வேலியே பயிரை மேய்ந்ததை போல அறிவுறுத்த வேண்டிய ஆசிரியர்களே வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.


புரிந்துணர்வு அவசியம் 


இது குறித்து டெல்லி காசியா பாத் பள்ளிகளை நிர்வகித்து வரும் 40 வயது நிர்வாகி தி வைர் இணையதளத்த்தில் பேசும்போது பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் உடனடியாக வெளி யேற்றப்படவேண்டும் என்கிறார் . கவுன்சிலிங்க் மட்டுமல்ல அங்கு கலந்துரையாடல்கள் நிகழ்த்த விழாக்கள் நடத்தவேண்டும் என்கிறார். அனைத்து சமய பண்டிகைகள் குறித்து நல்ல தொரு உரையாடல்கள் மாணவர் களிடையே நடத்தப்பட வேண்டும் என்கிறார் .


எடுத்துக்காட்டாக ஈத் பெருநாள் வந்தால் இஸ்லாமிய வரலாறு, திரு-குர்ஆன் பற்றி கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்கிறார் இதுதான் பரஸ்பர புரிதலை உருவாக்கும் என்கிறார் .


கவுன்சில் கொடுக்க வேண்டிய நிலை கான்பூர் பள்ளியை போன்று குறுகிய எண்ணம் கொண்டவர்களை நியமிக்காமல் நற்குணம் கொண்டவர்கள் ஆசிரியர்களாக கல்வி நிலைய ஊழியர்களாக நிய மிக்கப்படவேண்டும் என்கிறார்.இங்கே ஆள்வோருக்கே கவுன் சலிங் கொடுக்கவேண்டிய நிலை. அப்பாவி மாணவரின் உயிருக்கு உலை வைத்த மனித மிருகங்கள் தண்டிக்கப்படுவது எப்போது?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.