சங்பரிவார் ஆட்சியை அம்பலப்படுத்தும் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் ஆவணப்படம்: அலறும் தணிக்கைத்துறை

இந்தியா

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென் மக்கள் சார்பு பொருளாதார நிபுனரான இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுArgumentative Indian (விவாதம் செய்யும் இந்தியன்)என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

குஜராத் வன்மச் சம்பவங்கள் நடந்து மூன்றாண்டுகள் கழித்து(2005ல்) அந்த நூல் வெளிவருகிறது. (அதன் காயம் 2004ல் சற்று ஆறியிருந்தாலும் அச்சம்பவத்தின் நினைவு வடுக்கள் அப்படியேத்தான் இருந்தன).அப்போது 'பல் இன அடையாளம்' என்ற உலகப் பார்வையை அப்பட்டமாக மறுப்பதும் நம்முடைய சிந்தனைக்குள் இந்துத்துவம் என்ற ஒற்றை அடையாளத்தை homogeneity திணிப்பதும் நடந்து வந்தது.
இந்த Argumentative Indian என்பது அன்றைய நாளில் பரபரப்பாக இருந்த முக்கிய செய்தியை மய்யப்படுத்தி எழுதிய புத்தகம் இல்லை. டாக்டர் சென்னை பற்றிய ஒரு ஆவணப்படம். கல்வியாளரும் திரைப்பட இயக்குனருமான சுமன் கோஷ் suman Ghosh இயக்கியது.

தணிக்கை வாரியத்தின் சண்டித்தனம்

இந்த ஆவணப்படத்தை பார்த்த கொல்கத்தா தணிக்கை வாரியம் censor board இப்படத்தில் டாக்டர் சென் பேட்டியளித்த, பேசிய, உரையாற்றிய இடங்களில் தென்பட்ட பசு,இந்து இந்தியா, இந்தியாவை பற்றிய இந்துத்துவ கண்ணோட்டம், குஜராத் போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இயக்குனர் கோஷிடம் சொன்னது.இதற்கு இயக்குனர் மறுத்து விட்டார். தணிக்கை வாரியத்துக்கு பணிவது இல்லை, சரியாக மோதிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு கோஷ் வந்துவிட்டார். தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள் நன்றாக உற்று நோக்கி ஆய்வு செய்துவிட்டார்கள். பின்னர் ஓசை முடக்கம் (mute) செய்ய வாய் வார்த்தையாகத்தான் சொன்னார்களாம். ஆனால் எழுத்துப் பூர்வமாக கேட்டிருக்கிறார்.ஆனால் வாரியம் மறுத்துள்ளது.

தணிக்கை வாரியம் ஏன் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் கையாளாக இருக்கிறது.வாரியம் நீக்க சொன்ன வார்த்தைகள் தான் நாட்டில் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஊட்டமாக இருக்கிறது.


ஆர்எஸ்எஸ்ஸின் பயம்

குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் நீக்கிவிட வாரியம் சொன்ன தற்கும் இது தான் காரணம். மற்றொரு பொருளாதார வல்லுனரான கௌசிக் பாசு டாக்டர் சென்னை பேட்டியெடுத்த பகுதியில் இருந்த அந்த வார்த்தைகளை சொல் முடக்கம் செய்யும் போது, பசு, குஜராத், இந்துத்துவ இந்தியா என்பன போன்ற குறிப்புகள் இல்லாமல் இந்துத்துவ அரசியல் குறித்த உரையாடலை எதிர்பார்க்க முடியாது. மிகச்சரியாக இவற்றை கொண்டுதான் பாஜாக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சமய பகையையும் தங்கள் மதவாதப் பேரரசையும் எழுப்பி இருந்தார்கள்.இந்த ஆவணப்படம் மக்கள் பார்வைக்கு போகும் போது,உலகத்தின் முன்பு வெளிப்பட்டு விடுவோம் என்று அவர்கள் பயந்தார்கள்.

சங்பரிவாரின் தாழ்வு மனப்பான்மை

2014 மே மாதம் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு பிரதமராக நரேந்திரமோடி வெற்றி உரை நிகழ்த்திய போது,"1200 ஆண்டுகள் நீடித்த அடிமைத்தனம்" என்ற படிமச் சொற்களைப் பயன்படுத்தினார். சங்பரிவார் கவனமாக நீண்டகாலமாக பராமரித்து வந்த தாழ்வு மனப்பான்மையின் ஒரு பகுதி தான் இது.அப்போதும், இப்போதும் சுய சிந்தனையற்ற ஒவ்வொருவரிடமும் இது தலை காட்டுகிறது. மேலும்,அறவே அறமில்லாத கருத்து அல்லது நடவடிக்கை அல்லது ஏதோ ஒன்று. டாக்டர் அமர்த்தியா சென்னை தாராளமாகப் பேச விடாமல் தடுப்பதும் அதேபோல், பசு (அரசியல்), குஜராத் (மாதிரி), இந்துத்துவா போன்றவைகளை குறிப்பிட விடாமல் தடுப்பதும் அவரது கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் சகிக்கமுடியாத தாக்குதல் ஆகும். இந்திய மக்களாட்சி தத்துவத்துக்கு இளைக்கும் தீங்கும் ஆகும்.காரணம்,இது மிகவும் நம்பிக்கைக்குரிய பொருளாதார வல்லுனர் மற்றும் அறிவுஜீவி இடத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற அறிவு செல்வத்தை பறித்துவிடும் செயல் ஆகும்.

தணிக்கை செய்வதற்கு இது டாக்டர் சென்னை பற்றிப் பேசும் வெறும் படம் மட்டும் இல்லை.சங்பரிவார் ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு குற்றச் செயலையும் அம்பலப்படுத்தும் ஆவணம்.வலிந்து வந்து சுத்தமாக அடித்து துவம்சம் செய்வதுசெயற்கையான அமைதியை திணித்து விவாதத்தை மறுப்பது, பாதிப்பு குறித்த அச்சத்தை புகுத்துவது கூலிப்படைகளை ஏவி மிரட்டுவது, அல்லது நிஜமாகவே ஒருவரை நேரில் சென்று தாக்குவது போன்ற செயல்களின் மூலம் சங்பரிவார் அரசுகள் விமர்சனத்தில் இருந்தும் இடித்துரைப்பதில் இருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.குறிப்பாக,பலஜ் நிகலானி தலைமையின் கீழ் இருக்கும் திரைப்பட தணிக்கை வாரியம் கேலிப்பொருளாகி விட்டது.இருப்பினும்,இந்த பைத்தியக்காரத் தனத்துக்குப் பின்னாடி சங்கப்பரிவாரத்தின் பலமாகவும் வலிமையான கருவாகவும் சிறந்த ஆட்சி என்கிற பொய்மை இருக்கிறது.

தேசத்தை மீள் உருவாக்கம் செய்ய இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தை அழித்து விட்டு அதன் மீது காவி வண்ணம் பூசுகிறார்கள். அமர்த்தியா சென் மதிப்புமிக்க பண்பாட்டு நினைவுகளை காக்கும் மூத்த காவலர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது தான் நமக்கு நமது பண்பாட்டை நினைவு ஊட்டுகிறது. மக்கள், வேற்றுமை, பன்முகத் தன்மை ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கிறது. இவற்றை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு உதவி செய்பவர்களுடன் நாமும் சேர்ந்திருக்க வேண்டும்.