ஜாமியா மில்லியா பல்கலை சிறுபான்மை அந்தஸ்து பறிப்பா?

இந்தியா

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயலும் போக்கு மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது . இந்திய முஸ்லிம்களின் குறிப்பாக வடஇந்திய முஸ்லிம்களின் பெருமை மிகு கல்வி நிறுவனங்களாக அலிகார் முஸ்லிம். பல்கலைக்கழகமும் , ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மும் திகழ்கின்றன.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா( சுருக்கமாக ஜே. எம் ஐ என அழைப்போம்)2011 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் ஜே. எம் ஐ ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் என அங்கீகரித்தது.


இந்நிலையில் பாஜக அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்த நிலைப்பாட்டை, ஜே.எம்.ஐ.யின் சிறுபான்மை அந்தஸ்தை திரும்ப பெற கோரிக்கை வைத்துள்ளது. ஜே.எம்.ஐ. பல்கலைகழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டது சட்டத்தை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறாகும் அதன் நோக்கம் சிறுபான்மை நிறுவனமாக இருந்ததில்லை அது மத்திய அரசின் நிதி உதவியால் உருவாக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை கூறி சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க வேண்டுமென்று வாதிட்டது. இந்நிலையில் ஜே. எம் ஐ பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க முயலும் பாஜக அரசின் சதி யை கண்டித்து மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.


மத்திய அரசு ஜே எம் ஐ பல்கலை விவகாரத்தில் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக மோத நினைத்தால் மாணவர்கள் மத்தியில் வலுவான எதிர்ப்புணர்வை தோற்றுவித்து அதன் விளைவு வீதிகளில் எதிரொலிக்க தொடங்கும். பொதுவாக பாஜக அரசு முஸ்லிம் விரோத அரசாக அறியப்பட்டு வரும் நிலையில் தற்போது அது முஸ்லிம் உயர் கல்வி நிறுவனங்களை குறி வைக்கிறது .மத்திய அரசின் இந்த செயலானது முஸ்லிம் மாணவ சமூகத்தின் தன்னம்பிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் மேலும் முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டை முடக்கி எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என ஜே எம் ஐ பல்கலைக்கழக மாணவரும் முஸ்லிம் மாணவ கூட்டமைப்பின் இணை செயலாளருமான அதீப் மாஸ் கான் தெரிவித்துள்ளார். சிறுபான்மை அந்தஸ்தை பறிக்க முயலும் சதி செயலை எதிர்த்து மாணவர்கள் வீதிகளில் திரள்வார்கள் என்றார். சிறுபான்மை அந்தஸ்தை சிதைக்க நினைப்பது சமுதாயத்தின் விலை மதிப்பு மிக்க விழுமியங்களை சூறையாடுவதற்கு சமம் நாங்கள் அதனை பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்க மாட்டோம் என மற்றொரு மாணவ உரிமை ஆர்வலர் குஷ்பு கான் எச்சரித்துள்ளார். ஜே எம் ஐ பல்கலை யை ஆரியத்துவ மயமாக்க அவர்கள் செய்யும் எந்த முயற்சியும் பலிக்காது. ஏனெனில் இது முஸ்லிம் மாணவர்களை பெரும்பான்மையாகக்கொண்ட கல்வி நிறுவனமாகும். இந்த பல்கலை கழகத்திற்கு வழங்கப்பட்ட சிறுபான்மை இடஒதுக்கீட் டின் வாயிலாக பல முஸ்லிம் மாணவர்கள் பலன் பெற்று வருகின்ற நிலையில் இது அநீதியானது என ஜே . எம்.ஐ.யின் சம்ரின் ஸைபி தெரிவித்துள்ளார். எஸ் ஐ ஓ மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் தலைவர் நஹாஸ் மாலா தெரிவித்தபோது தவறான முடிவு என்றார். அதன் வரலாற்று சிற்ப்புக்கு களங்கம் விளைவிப்பதாக அமையும் என்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா மே 2011ல் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளிலும் முஸ்லீம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. பொதுப்பிரிவினருக்கு 42 சதவீதம் வழங்கப்படும் என அறிவித்தது.சிறுபான்மை அந்தஸ்து பறிக்கப்படக்கூடிய பட்சத்தில் 50 சத இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்படும் கல்வித்துறையில் இன்னும் மேம்பாடு அடையாத முஸ்லிம் சமுகத்திற்கு குறிப்பாக வட இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மத்திய அரசு செய்யும் வன்மம் நிறைந்த துரோகமாகவே வரலாற்றில் குறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.