இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம்? உண்மையை அறிய புதிய முயற்சி!

இந்தியா

1947 ஆம் ஆண்டில் இந்தியா,பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிய நேர்ந்தது.

நாடு பிரிவினை பற்றி இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பு விளக்கங்களை அறிந்திருக்கிறோம்.காந்தி, ஜின்னா,நேரு,மவுண்ட்பேட்டன் ஆகியவர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள் ஊடாக பிரிவினை வரலாறு கூறப்படுகிறது. ஆனால்,பிரிவினையை நேரில் கண்டு உணர்ந்தவர்களிடம் கேட்டு தொகுக்கப் படவில்லை.இப்போது,முதன் முறையாக அந்த முயற்சி செய்யப்பட்டு இருக்கிறது.


The 1947 partition Archive என்ற பெயரில்,குனீதா சிங் பல்லா (Guneetha Sing Bhalla) என்பவர் உயிருடன் இருக்கும் பிரிவினை காலத்து மனிதர்களை சந்தித்து பதிவு செய்திருக்கிறார். இவர்,சுமார் 43000 சாட்சிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்திருக்கிறாராம்.இவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறுகிறார். மேலும் 30,000 க்கும் மேற்பட்ட இணைய ஆவணங்களையும் (Digital Documents) விரைவில் வெளியிட இருக்கிறாராம்.இந்தியா,பாகிஸ்தான்,அமெரிக்க பல்கலை கழகங்களின் கூட்டு முயற்சியில் இந்த ஆவணங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. பிரிவினை கால சம்பவங்கள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் இதில் இருக்கும். இந்த பதிவுகள் பிரிவினையை நேரில் கண்டு இன்னும் மிச்சமாக உயிருடன் இருப்பவர்களை சந்தித்து பேட்டியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியானது அமெரிக்காவின் Stanford Universityன் நூலகத்தில் இருக்கிறது.


இங்குள்ள தொகுப்புகளில் இருந்து யார் வேண்டுமானாலும் பதிவுகளை பெற முடியும்.மிக நுட்பமான மற்றும் உணர்வுப் பூர்வமான மற்றொரு பகுதி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தேவைக்காக இந்தியாவில் உள்ள அசோகா பல்கலை கழகம்,தில்லி பல்கலை கழகம்,குரு நானக் தேவ் பல்கலை கழகம் ஆகிய தேர்வான பல்கலை கழகங்களின் நூலகங்களிலும் இந்த ஆவணங்களை பெறலாம்.பாகிஸ்தானின் லாகூர் பல்கலைகழகம் மற்றும் ஹபீப் பல்கலை கழகங்களின் நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.இவைகளில் இருந்து இந்த ஆவணங்களை பெற முடியும் என்கிறார் குனிதா சிங் பல்லா.இந்திய பல்கலை கழகங்களின் ஆவண பாதுகாப்புக்கு Tata Trust நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.


"எங்கள் இலக்கு சுமார் 10,000 வாய் மொழி வரலாறை பதிவு செய்வது" என்கிறார் குர்னிதா.கலைஞர்கள்,ஆய்வாளர்கள்,ஊடகத்தார்கள்,மாணவர்கள் மற்றும் இதர தரப்பினர் தினமும் எங்களை தொடர்பு கொண்டு வாய் மொழி வரலாறுகளை கேட்டு விண்ணப்பிக்கின்றனராம்.ஸடான்போர்டு பல்கலை கழகம் சேகரித்து வைத்திருக்கும் வாய் மொழி வரலாறு ஆவணங்களை வரலாற்று ஆராய்ச்சியாளர் பிரியா சத்தியா (Piria Satia) மேற்பார்வை செய்கிறார்.கடந்த 70 வருடங்களாக காந்தி,ஜின்னா,நேரு மவுண்ட்பேட்டன் உரையாடல்கள் வழியாகத்தான் பிரிவினை பற்றிய தகவல்களை அறிகிறோம்.இப்போது,இரு நாட்டையும் உருவாக்கிய மக்கள் நேரடியாக கூறும் கதையை நாம் பதிவு செய்து கொண்டுள்ளோம்.இதன் மூலமாகத்தான் பிரிவினையின் உண்மையான வரலாறை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் பிரியா சத்தியா. "ஆவணங்களை பாதுகாத்தல்,எண் வரிசை படுத்துதல் (digitisation) எழுத்து பதிவுகளை பாதுகாத்தல்,பரப்புதல் ஆகிய வேலைகளை செய்து வருகிறோம்.கல்வியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கும் இது பயன் தரும் என்கிறார் Tata Trustன் கலை மற்றும் கலாச்சார துறை தலைவர் தீபிகா சுராப்ஜி.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.