தமிழக மக்கள் கஷ்மீர வரலாறை நடுநிலையோடு படிக்க வேண்டும் ! மமக கருத்தரங்கில் காஷ்மீர் எழுத்தாளர் டாக்டர் முஜப்பர் வேண்டுகோள் !

இந்தியா

கடந்த ஆகஸ்ட் 1, 2017 அன்று மாலை மண்ணடி ஐபிபி அரங்கில் மமக வழக்கறிஞர் அணி சார்பில் "கஷ்மீர் பிரச்சினை ஒரு வரலாற்று பார்வை" கருத்தரங்கு நடைபெற்றது. காஷ்மீரை சார்ந்த சமூக சேவகரும்,எழுத்தாளருமான மருத்துவர். ராஜா முஸப்பர் அவர்கள் கலந்து கொண்டு ஒல,ஒளி படப்பதிவுகளோடு கருத்துரை வழங்கினார்.


கஷ்மீர் பிரச்சினை குறித்த ஆழமான விவரங்களை எளிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார் மருத்துவர் முஸப்பர் எந்த காய்தல்,உவத்தலுமின்றி ஆவணங்களின் துணையோடு கஷ்மீர போராட்ட வரலாற்றை முகலாயர் காலம் தொடங்கி இன்று வரை விளக்கியது மிகுந்த பயனளிப்பதாய் இருந்தது.


இறுதியில் கேள்வி,பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்தார். கஷ்மீர மக்களுக்கு இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் என்ன உதவி செய்ய வேண்டும் என கேட்கப்பட்டதற்கு, " இந்திய மக்கள் நடுநிலையோடு கஷ்மீர மக்களின் போராட்ட வரலாறை ஆழ்ந்து படிக்க வேண்டும். நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் " என கேட்டுக் கொண்டார்.


நிகழ்வில் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் வரவேற்புரையாற்ற, பேரா.ஜவாஹிருல்லா அறிமுக உரை நிகழ்த்தினார். பேரா.ஹாஜாகனி ஆங்கில உரையை தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்தார். வழக்கறிஞர் அப்ரார் அஹ்மது நன்றியுரையாற்றினார். இயக்குனர்கள் அமீர், கரு. பழனியப்பன், பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி, வழக்கறிஞர் ஜீவகிரிதரன், வழக்கறிஞர் தமிழினியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரங்கம் நிறைந்து வெளியிலும் மக்கள் நின்று உரையை கேட்டது கஷ்மீர் மக்கள் மீதான அவர்களது கரிசனையை உணர்த்தியது. எல்லாப்புகழும் இறைவனுக்கே !

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.