ஆங்கிலேயருக்கு அடி பணிதல் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷம் பிராமண ஆதரவு : பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பங்கிம் சந்திர சட்டோபாத்யாய

இந்தியா

பங்கிம் சந்திர சட்டர்ஜி அல்லது பங்கிம் சந்திர சட்டோ பாத்யாயா என்பவர் இந்து ராஷ்டிராவின் தந்தையாக கருதப்படுகிறார் . அவரது வாழ்க்கையின் இறுதி 10 ஆண்டுகளில் அவர் எழுதிய மூன்று நாவல்கள் ஆனந்த மத், சோதராணி , மற்றும் சீதாராம். இந்த மூன்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷங்களையே நிரப்பியதாகும். இந்திய தேசியத்தை இந்துத்துவ தேசியமாக சுருக்கி வடிவமைத்தலில் முக்கிய பங்கு வகித்தார். முஸ்லிம் துவேஷம் தான் இதில் மையகருத்தாக இருந்தது. பங்கிமால் எழுதப்பட்ட ஆனந்த மத் இந்து ராஷ்டிராவை மையப்படுத்தியே எழுதப்பட்டது. இந்த நூல் இந்து ராஷ்டிராவின் புனித நூலாகவே கருதப்பட்டது.


வந்தே மாதரம்


இந்திய தேசியத்தை மதவாத தேசியமாக குறுக்கி சிறிதாக்கி காட்டியதில் முக்கிய பங்கு வகித்தவரும் இவரே. வந்தேமாதர ம் பாடலை அறிமுகப்படுத்தி நாட்டுப்பற்றை பாரத தாயை வணங்குவோம் என்பது போன்ற பிற சமயங்கள் ஏற்றுக்கொள்ளாத நாடக பாணி நடைமுறைகளை புகுத்தினார்.


இந்து மத சாமியார்கள் முஸ்லிம்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபடவேண்டும் என ஆனந்த மத் கூறுகிறது. முஸ்லிம்களை தாக்குவதை கவர்ச்சிகரமான முறையில் பிரச்சாரம் செய்கிறது. இந்து சாமியார்கள் முஸ்லிம்களின் வீடுகளை எவ்வாறு கொளுத்தி னார்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு சூறையாடினார்கள் என்று பங்கிம் சந்திரரின் நாவல் விவரிக்கிறது. வந்தே மாதரம் என்று சொல்லவில்லை என்பதற்காக ஒரு முஸ்லிம் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை அந்த நாவல் கூறுகிறது. அதே பாணிதான் பாசிச பயங்கரவாதிகளால் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.


வெள்ளைக்காரர்களுக்கு பிரியமானவர்


பங்கிம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரியமானவராக விளங்கினார். அவர்கள் நாட்டின் வளத்தினை கொள்ளையடித்து சூறையாடவே வந்துள்ளனர் என அவர் ஒரு போதும் கருதவே இல்லை. முஸ்லிம்களை தமது முதல் எதிரி என பிரகடனப்படுத்தினார். பிரிட்டிஷ் எஜமானர்களை அவர் எவ்வாறு நேசித்து காலில் விழுந்து கிடந்தார் என்பதற்கு ஆனந்த மத்தின் கடைசி வரிகளில் காணமுடியம்.


வெள்ளைக்காரர்களின் ஜால்ரா


1857 ல் நாடே முதல் இந்திய விடுதலைப்போரில் தகித்து கொண்டு இருந்தபோது இந்திய விடுதலைப்போராட்ட தளபதிகள் கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் நாடே துயரத்தில் மூழ்கி கிடந்த அடுத்த ஆண்டு பங்கிம் துணை நீதிபதியாக ஆங்கிலேய அரசால் நேரடியாக நியமனம். செய்யப்பட்டார் பதவி உயர்வு பெற்று 1891 வரை மாவட்ட நீதிபதியாக இருந்தே ஒய்வு பெற்றார் . ராவ் பகதூர் போன்ற பிரிட்டிஷ் ஜால்ராக்களுக்கு கிடைக்கவேண்டிய பட்டங்கள் அனைத்தும் அவருக்கு கிடைத்தன.


எங்கள் மதம் போச்சு சாதி போச்சு எங்கள் கண்ணியமும் போச்சு என்று குறிப்பிடும் பங்கிமின் வரிகள் தலித் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட மக்களால் நாடு நிரம்பியுள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டு சாதீய ரீதியிலான பார்ப்பன உயர் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்கிறார்.


ஆனந்த மத்தில் சாமியார்கள் ஒரு காலம் வரும் அப்போது மஸ்ஜிதுகளை நொறுக்கி அதே இடத்தில் கோவில்களை கட்டுவோம் என்று சபதம் செய்கிறார்களாம் . இன்று பங்கிமின் பேரர்கள் அதைத்தானே செய்கிறர்கள். இவ்வாறு சொல்லக்கொண்டே போகலாம். ஒவ்வொரு நடுநிலையான இந்தியனின் ரத்தமும் கொந்தளிக்க தொடங்கும். இவ்வளவு பாரம்பரிய (?) சிறப்பு பொருந்திய வந்தே மாதரத்தை நாட்டு மக்கள் இனி பாடுவார்களா ?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.