தலைமை தணிக்கையாளர் சுட்டிக்காட்டும் மோடி ஆட்சியின் அவலங்கள்

இந்தியா

சூலை 21 அன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கை,மோடி தனது வார்த்தை ஜாலங்களால் நாட்டுக்கு "நல்ல காலம் பிறக்க போகிறது" என்று நமது கிராமப்புறங்களில் குடுகுடுப்பை காரர் வீடு வீடாக சென்று கூறுவது போல் பிரச்சாரம் செய்தது எல்லாமே மாயை என அம்பலப்படுத்தி உள்ளது. கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள சில மகா தவறுகள் மோடியின் மோசமான ஆட்சிக்கு உதாரணங்களாகும்.


1.தரம் குறைந்த அளவு குறைந்த ஆயுதங்கள்


அரசால் ராணுவத்திற்கு ஆயுத கொள்முதல் செய்வதற்காக OFB நிறுவனம் 2013 முதல் ராணுவத்திற்கு விநியோகம் செய்த ஆயுதங்கள் தரம் குறைந்ததாகவும் போதுமானதாகவும் இருக்கவில்லை. தளவாட பராமரிப்பு கண்காணிப்பு துறையின் அறிக்கை ஒன்று 2015 இல் OFB இன் தளவாடங்கள் கையிருப்பு மற்றும் தரம் பற்றி எச்சரிக்கை எழுப்பிய பின்னரும் குறைகள் சரி செய்யப்படாததை விளாசி இருக்கிறது.
2. ரயில்வேயில் தரம் குறைந்த உணவுகள்


ரயில்வே துறையில் உபயோகிக்கும் காலவறை தாண்டிய உணவு பொருட்கள் பயணிகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.லக்னோ அனந்தவிஹார் இடையிலான விரைவு ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட கட்லட்டில் ஆணி கண்டு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தரம் குறைந்த தண்ணீர் பாட்டில்களில் விற்கப்பட்டுள்ளது.


கடந்த வருடம் சூலை முதல் அக்டோபர் வரையில் 74 ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்த கூடியதாக இருந்தன என்பது கண்டறியப்பட்டுள்ளது. (இதை பற்றிய விரிவான கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றுள்ளது)


3. கடற்படையின் காலவதியான தொழில்நுட்பம்


இந்திய கப்பல் படையின் இரு பெரும் விபத்துகள் காரணமாக 20 கடற்படையினர் தங்கள் இன்னுயிரை இழப்பதற்கு காலாவதியான தொழில் நுட்பம் மற்றும் கப்பற்படையினருக்கு போதிய பயிற்சி மற்றும் ஒய்வு வழங்கப்படாததும் காரணம் என சுட்டி காட்டப்பட்டுள்ளது.


4. தொலை தொடர்பு நிறுவனங்களால் வருவாய் இழப்பு


ஆறு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை ரூ 61,064 கோடி குறைத்து காட்டியுள்ளதன் மூலம் அரசுக்கு சுமார் 7,697.6 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளன.


5. அரசு மருத்துமனைகளில் காலாவதியான மருந்துகள்


தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ 9,500 கோடி செலவழிக்கப்படாமல் திரும்பி உள்ளதுடன் அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த காலாவதியான மருந்துகள் விநியோகம்,போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாதது என்று பல குறைகளை சுட்டி காட்டி இருக்கிறது.


6. அசாம் வெள்ளத்தில் மக்கள் பாதிப்பிற்கு காரணம்


வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு அசாம் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையில் மத்திய அரசு 60% வரை குறைத்து வழங்கியதன் விளைவு மாநிலத்தின் பதிமூன்று மாவட்டங்களில் சூலை 19 ஆம் தேதி வரையில் எழுபத்தியரு பேர் மரணம் அடைவதற்கும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதற்கும் மத்திய அரசு காரணமாக இருந்து உள்ளது.


7. விவசாயிகள் மரணத்திற்கு காரணம்


பயிர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடு போய் சேராததால் பல விவசாயிகள் மரணத்திற்கு இந்த அரசு காரணமாக இருந்துள்ளது.


8. அரசு செலவு பாழ்


அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு உதவவும்,கண்காணிக்கவும் கனடா நாட்டில் இருந்து 1.85 கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் அரசின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வீணாகும் சூழல் உள்ளத்தையும் சுட்டி காட்டி உள்ளது


9. மல்லையாவிற்கு சலுகை- அரசுக்கு இழப்பு


விஜய் மல்லையாவின் விமான சேவை நிறுவனத்திற்கு அளித்த சலுகையினால் 17 கோடி ரூ இழப்பு ஏற்பட்டுள்ளது.


10. கல்வி துறையில் கோடிகள் இழப்பு


கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்துவதை கண்காணிக்க தவறியதன் விளைவாக ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்பிற்கும் மோடி அரசை கணக்கு தணிக்கை துறை காரணம காட்டி உள்ளது.


ஊடகங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து "வளர்ச்சியின் நாயகன்" என தன்னை தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் மோடி எஞ்சி உள்ள தனது ஆட்சி காலத்தையாவது வெளிநாடுகளை சுற்றி பார்ப்பதை விட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் நம்பிக்கையை நிறைவு செய்யும் வகையில் ஆட்சியை நடத்துவாரா என்று எதிர் பார்க்கிறார்க்கிறார்கள்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.