நாங்கள் இந்துக்கள் அல்ல ‘லிங்காயத்துகள்’

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் முக்கிய சாதியினராக இருப்பவர்கள் லிங்காயத்துகள். இரண்டு லட்சம் லிங்காயத்துகள் பேரணி நடத்தி தங்களை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடகம் மாநிலம் பிதாரில் இந்துயிசத்திலிருந்து லிங்காயதிசத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் லிங்காயத் சாதியினர் பேரணியாக சென்றனர். " லிங்காயத் மதம் சுதந்திரமான மதம்" என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெற்றது. பிதாரில் உள்ள நேரு திடலில் நிறைவடைந்த இந்த பேரணியில் லிங்காயத் சமூகத்தினருக்கு தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சுயேட்சையான மதம்


இந்த பேரணியில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவலிங்க சிவாச்சாரியார் பங்குக் கெண்டு உரையாற்றும் போது 'லிங்காயித்சம் பஸ்வஸ்வரால் 12ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சுயேட்சையான மதமாகும். அது இந்து மதத்தின் ஒரு அங்கமாக ஒரு போதும் இருந்ததில்லை. அது இந்து மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக போராடியுள்ளது" என்று குறிப்பிட்டார்.


கூடல்சாங்ம மடத்தின் பீடாதிபதி பஞ்சமசாலி ஜகத்குரு இந்த பேரணியில் பேசுகையில் 'ஒரு சுயேட்சையான மத அந்தஸ்து எங்களுக்கு தேவை. முதலமைச்சர் இதனை பரிந்துரைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.


இப்பேரணியில் பங்குக் கொண்ட மாதா மகாதேவி "லிங்காயத்துக்கள் இந்துக்களும் அல்ல அல்லது இந்துக்களின் ஒரு துணை பிரிவும் அல்ல. நாங்கள் தனித்த மதத்தினர்’’ என்று முழங்கினார். இந்த போராட்டத்தில் பங்குக் கொண்ட மடாதிபதிகள் ஒருமித்த குரலில் பின்வருமாறு பிரகடனம் செய்தனர்:


"ஒருவர் இந்துவாக இருக்க வேண்டுமெனில் வேதங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். வேதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்துக்கள் அல்ல. பவுத்தர்கள் வேதங்களை நிராகரிக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கென சொந்தமான வேதங்களை வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் மதத்தை விட்டு வெளியேறிவிட்டவர்கள் என்று கருதுகிறார்கள். இதே அடிப்படையில் வேதங்களை நிராகரித்து விட்டு கன்னட வச்சானா மீது நம்பிக்கை வைத்துள்ள லிங்காயத்துகளும் இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்கள் என்றே கருத வேண்டும்."


லிங்காயத்கள் ஒரு தெய்வ நம்பிக்கையுடையவர்கள்


இப்பேரணியில் பேசிய பசவலிங்க பட்டதேவரு என்ற அறிஞர்: "வேத மதம் பல தெய்வ நம்பிக்கையுடையது. 33 கோடி தெய்வங்களும் தெய்வானைகளும் இருப்பதாக வேதங்களை நம்பும் மக்கள் கருதுகிறார்கள். ஆனால் லிங்காயத்துகள் ஒரு தெய்வ நம்பிக்கையுடையவர்கள். நாங்கள் லிங்கத்தை மட்டுமே வணங்குகிறோம். லிங்கம் உருவமில்லாத தெய்வம். நாங்கள் எந்த வகையிலும் இந்துக்கள் இல்லை" என்று குறிப்பிட்டார்.


படுகொலைச் செய்யப்படுவதற்க முன்பு டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இது குறித்து எம். எம். கல்பெருக்கி ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் 'லிங்காயித்சம் வேதத்திற்கு உட்பட்ட மதம் அல்ல. அது ஒரு தனித்த மதமாகும். ஆனால் காலம் செல்ல செல்ல அது வேத கலாச்சாரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியது. லிங்காயத் தனித்த மதமாக தான் இருக்க வேண்டும். ஏனெனில் அது போதிக்கும் தத்துவங்கள் வேத நடைமுறைகளுக்கு முரண்பட்டே உள்ளன. சமணம் மற்றும் சீக்கீயத்திலும் வேத தாக்கங்கள் உள்ளன. ஆனால் அவை தனித்த மதங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன." என்று குறிப்பிட்டிருந்தார்.
தனி மதமாக லிங்காயித்சத்தை அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் பங்குக் கொண்ட லிங்காயத் தர்ம குருக்கள் பின் வரும் அறிவிப்பை வெளியிட்டனர்: "சைவத்தின் ஒரு பிரிவு தான் லிங்காயத்சம் என்று பொதுவாக ஒரு தவறான புரிதல் உள்ளது. லிங்காயத்கள் சூத்திரர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் லிங்காயித்சம் இந்து மதத்தின் ஒரு பிரிவோ அல்லது துணை பிரிவோ அல்ல. அது ஒரு தனித்த மதமாகும்.


லிங்காயித்களின் இந்த போர் கொடி அனைவருமே இந்துக்கள் என்று ஒற்றை மதம் பற்றி பேசும் சங்கிகளுக்கிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.லிங்காயத்துகளின் ஆன்மீக தலைவர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை பிதார் போராட்டத்தின் காரணகர்த்தவாக பழிச் சொல்லி வருகிறார்கள்.