மோடி ஆட்சியில் ரயில்களில் தரமற்ற உணவு: தலைமை தணிக்கையாளரின் அதிர்ச்சி அறிக்கை

இந்தியா

ரெயில் பயணிகளுக்கு இந்தியன் ரெயில்வே வழக்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானதாக இல்லை என மத்திய அரசின் தலைமை செலவுக்கட்டுப்பாட்டாளர் மற் றும் தணிக்கையாளர் (சிகிநி) அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்பித்துள்ளார். இந்திய ரயில்களில் பயணம் செல்வோருக்கு இது அதிர்ச்சி தரும் செய்தி இல்லை.இந்தியன் ரெயில்வேயின் உணவு வழங்கல் நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருப்பதை மத்திய தணிக்கையாளரின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. உணவு வழங்களில் இந்தியன் ரெயில்வேயின் மோசமான நிர்வாகத்தையும் அது குறிப்பிட்டு இருக்கிறது.தரமற்ற உணவுக்கு ஏகபோகமயமாதல் காரணமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறது.


மோசடிகள்


திறமையின்மை மற்றும் மோசடிகள் காரணமாகவே உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் சுட்டி காட்டி இருக்கிறது.ரயில் பயணத்தின் போது ரயிலில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் சுகாதாரம் மற்றும் சுத்தம் என்பது சராசரி அல்லது மோசம் என்று தான் 75 சதவீத பயணிகள் உணர்கிறார்கள்.ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயில்களில் வழங்கப்படும் உணவுப் பண்டங்களானது மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது என்ற அதிர்ச்சிகரமான தகவலை தலைமை தணிக்கையாளர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தலைமை தணிக்கையாளரின் குழு ஆய்வு செய்ததில் ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பழ ஜூஸ், பிஸ்கட்ஸ் மற்றும் பல்வேறு பால் குளிர்பானங்கள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றது என தெரியவந்து உள்ளது. அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. மேலும் அங்கீகாரம் பெறாத குடிநீர் பாட்டில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இவை ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் சிஏஜி தெரிவித்து உள்ளார்.


அசுத்தமான தண்ணீர்


11 ரெயில்வே மண்டலங்களில் 21 ரெயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடையாது. காப்பி, டீ மற்றும் சூப் போன்றவை தயாரிப்புக்கு அசுத்தமான தண்ணீர் 22 ரெயில்களில் பயன்படுத்தப்படுகிறது.
உணவுப்பொருட்கள் தயாரிப் புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரெயில்வே தண்ணீரே சில ரெயில்களில் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பொதுவான ரயில்வே தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. 13 ரெயில்வே மண்டலங்களில் 32 ரெயில் நிலையங்களில் சமையல் அறையில் கை உறை மற்றும் தலை கவசம் அணிவது கிடையாதாம்.


ஆய்வின் போது உணவுப்பொருட்கள் மோசமாக உள்ளதும் அதன்மீது பூச்சிகள் பறந்ததும் காணப்பட்டு உள்ளது. மூன்று ரெயில் நிலையங்களில் இதுபோன்ற பூச்சிகளிடம் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது, தூசி காணப்படுகிறது. துரந்தோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் உணவு பொருட்கள் வைக்கப்படும் அறைகளில் எலிகள்,கரப்பாண் பூச்சிகள் உள்ளனவாம்.


மறுசுழற்சி உணவுகள்


கான்பூர்-டெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட ரெயில்களில் சமையல் அறையில் விற்பனை ஆகாத புரோட்டாக்கள் மறுசுழச்சி செய்யப்படுகிறது. புரோட்டக்கள் மற்றும் மோசமான உணவுகள் மறுசுழச்சி செய்யப்படவில்லை என்பதை ஆய்வு செய்ய பரிசோதனை இயந்திரம் கிடையாது.


புகார்களை சரிசெய் யும் அமைப்பும் செயல்படு வதில்லை. புகார்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.நடவடிக்கையும் இல்லை.அதிகமான புகார்கள் உணவு சேவை (நீணீtமீக்ஷீவீஸீரீ sமீக்ஷீஸ்வீநீமீ) குறித்தே வருகிறது. ரெயில்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து தான் அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளதாகவும் மத்திய தணிக்கை துறை தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.


ஊழல்


இதற்கெல்லாம் ஊழல் மலிந்து காணப்படுவது தான் காரணம்.மூன்றாண்டுகள் ஊழல் இல்லாத ஆட்சி தந்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி பெருமிதமாகப் பேசினார். ஆனால் பல்வேறு துறைகள் ஊழலால் சீரழிந்து இருப்பதை அவர் வேண்டுமென்றே தாண்டி செல்கிறார்.மக்களின் அசட்டையும் கேள்வி கேட்க துணிவில்லாத பலவீனமும் இந்த சீரழிவுகளுக்கு காரணம்.ஒருவேளை அரசு நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்களையும் தேசவிரோதிகள் என்பார்களோ?


தேசத்தை சுத்தப்படுத்தும் சுவஷ் பாரத் திட்டத்தை 3 ஆண்டுகள் முன்னர் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அவர் துடைப்பத்தை எடுத்து தெருவோர குப்பைகளை கூட்டியபடி போஸ் கொடுத்தார்.அதனால் தூய்மை இந்தியா என்பது இன்று வரையிலும் தெருவை கூட்டிப் பெருக்குவதாகவே சுருங்கி இருக்கிறது. தூய உணவு தூய்மை இந்தியாவின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.ஆனால் இல்லை.
சுவஷ் பாரத்தில் தூய உணவும் உண்டு என்பதை கற்பிக்க வேண்டும்.


உலகின் பல நாடுகள் ரயில்வே துறையின் தரத்தையும் சுகாதாரத்தையும் திடமாக மேம்படுத்தி இருக்கின்றன.இந்திய ரயில்வே அமைச்சகம் இதில் அக்கறை எடுக்கவில்லை.ரயில்களின் வேகம் தேவைக்கு ஏற்பவும் ரயில்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் அதிகப்படவில்லை.


சில பெட்டிகள் அமர முடியாத அளவுக்கு துர் நாற்றம் வீசுகிறது.கழிவரைகளில் தண்ணீர் இருப்பதில்லை. பிரதமருக்கும் பொறுப்பானவர்களுக்கும் இதை யார் எடுத்துச் சொல்வது என்ற கவலை ரயில் பயணிகளுக்கு இருந்து வந்தது.பொறுப்பானவர்கள் காதுகளுக்கு எட்டும் படிக்கு தணிக்கை துறை கண்டித்து கூறி இருக்கிறது.ரயல்வேக்கு என தனியாக இருந்த பட்ஜெட்டும் ரத்து செய்யப்பட்டு பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே, ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு பிரதமரும் நிதி அமைச்சரும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும்.


தலைமை தணிக்கையாளரின் குழு ஆய்வு செய்ததில் ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பழ ஜூஸ், பிஸ்கட்ஸ் மற்றும் பல்வேறு பால் குளிர்பானங்கள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றது என தெரியவந்து உள்ளது. அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.