கேரளாவில் மாட்டுக்கறி விற்க கூட்டுறவு சங்கம் தொடங்கிய பாஜக

இந்தியா

பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாடெங்கும் படுகொலைகள் நடத்தப்பட்டு வரும் இந்த தருணத்தில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் ம் இணைந்து கூட்டுறவு விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளன.


இதில் இறைச்சி குறிப்பாக மாட்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனை உள்பட நடத்தப்பட உள்ளதாக பிரபல மலையாள ஊடகமான தேசாபிமானி தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் பாஜக மாவட்ட தலைவர் ஏ நாகேஷ் , செயலாளர் டி. எஸ் . உல்லாஸ் பாபு , மற்றும் பி வி சுப்ரமணியம் ஆகியோர் தொடங்கி வைக்க திருவம்பள்ளி கோயிலின் அருகே நகரின் மையப்பகுதியில் இந்த கூட்டுறவு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆடு மற்றும் மாட்டு இறைச்சி மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும் மக்களுக்கு உடனடியாக எப்போதும் கிடைக்க குளிர் சாதன முறையில் பதப்படுத்தப்பட்டு கிடைக்க வழி வகை செய்யப் பட்டுள்ளதாம்.

கால்நடை இறைச்சி தயாரிப்பு கூட்டுறவு பண்டகசாலை அமைக்கப்பட்டு ஆர் எஸ் எஸ் இன் பின் புலத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் தலைவராக பாஜகவின் நாகேஷ், உல்லாஸ் பாபு துணைத்தலைவராக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த கூட்டுறவு சங்கத்தில் பல சமூகத்தினரும் இறைச்சி வாங்க வருகின்றனராம். பசுவின் பெயரால் படுகொலைகள் நிகழ்ந்து வரும் இந்நாட்டில் பணத்திற்காக மாட்டுக்கறி விற்பனை செய்யும் கேரளா பாஜகவினரின் செயல் குறித்து பசு பயங்கரவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.