கேள்விகள் இங்கே சங்கிகளின் பதில்கள் எங்கே?

இந்தியா

நரேந்திர மோடி அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் ஆர் எஸ் எஸ் பற்றி அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்களால் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றிற்கு பதில் அளிக்காமல் கடந்து போவது என்பது சங்கிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

சங்கிகள்

நாடு முழுவதும் வெறுப்பு பிரச்சாரம் நிகழ்த்தி வரும் ஆர் எஸ் எஸ் சங்கிகள் நாட்டின் விடுதலைக்கு தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமான தியாகங்களை சந்தித்த சிறுபான்மை முஸ்லிம்களின் தேச பற்றை கேள்வி கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


ஆனால் ஆர் எஸ் எஸ் வகையறாக்களுக்கு எதிராக முன்வைக்கும் சாதாரண கேள்விகளுக்கு அவர்களிடம் இது வரை பதில்கள் வருவதில்லை.


இந்திய முழுவதும் இஸ்லாமிய, கிறித்தவ சிறுபான்மையினருக்கு எதிராக தங்களின் ஆரிய சித்தாந்தத்தை தங்களின் பல்வேறு அமைப்புகள் மூலம் பரப்பும் சங்கிகளின் உறவினர்களில் பலர் சிறுபான்மையினர் உடன் திருமண உறவு கொண்டிருப்பது ஏன்?


விடுதலைப் போராட்டத்தில் தூக்கில் தொங்கிய ஒரு சங்கியை காட்ட முடியமா?தற்போது எதெற்கெடுத்தாலும் தேசியவாதம் பேசுவதும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்ச்சிப்பவர்கள் மீது தேச துரோகிகள் என சேற்றை வாரி இறைக்கும் சங்கிகள் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற ஒரு சங்கியின் பெயரையாவது சொல்ல முடியுமா? விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று தூக்கில் தொங்கிய ஒரு சங்கியையாவது காட்ட முடியுமா?


இவர்களின் மிதவாத முகம் என இவர்களே அழைத்து கொள்ளும் வாஜ்பாய் ஆங்கிலேய அரசின் தரகராக செயல்பட்டதை மறுக்க முடியுமா,? சர்வார்கார் ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கருணை மனுக்களை மறுக்க முடியுமா?


இவர்களின் குருஜியான கோல்வால்கர் தனது சங்கி பரிவாரங்களுக்கு ஆங்கிலேயே அரசை எதிர்த்து சக்தியை வீணாக்காமல்,அவற்றை முஸ்லிம்கள்,கிறித்தவர்கள் மற்றும் பொதுவுடைமை தோழர்களுக்கு எதிராக பயன்படுத்த சேமித்து வையுங்கள் என கூறியதை மறுக்க இயலுமா?வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் டாக்டர்.அம்பேத்கர் பங்கு கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அருண் சோரி தனது குரு கோல்வால்கர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது சில இலைகளை மட்டும் அசைத்து பார்க்கும் சிறு காற்று என 1944 ஆம் ஆண்டு புனேயில் கொச்சை படுத்தி பேசியத்தையோ ,ஆர் எஸ் எஸ் அன்றைய மத்திய மாகாண ஆளுநருக்கு தாங்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என கடிதம் எழுதியதை பற்றி கேள்வி எழுப்பினால் பதில் அளிப்பதில்லை மாட்டிறைச்சி உண்ணும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது உண்டா?


பதில்கள் எங்கே?


தற்போது மாட்டிறைச்சிக்கு எதிராக கலவரம் ஏற்படுத்தும் சங்கிகள் மாட்டிறைச்சியை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும் ஆங்கிலேயருக்கு எதிராக எந்த போராட்டத்தையும் முன்னெடுத்ததில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை.


மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே உள்ள பிராமணர்கள் எண்பத்தைந்து சதவிகிதம் கொண்ட தலித்துகள், மலைவாழ்மக்கள் மற்றும் பிற வகுப்பை சேர்ந்த(ஓ.பி சி)மக்களில் எதனை பேருக்கு ஆர் எஸ் எஸ் இல் பதவிகள் வழங்கியுள்ளது எனும் கேள்வியும் பதில் எதிர்பார்த்து காத்து இருக்கிறது. தலித்துகள், மலைவாழ்மக்கள் மற்றும் பிற வகுப்பை சேர்ந்த (ஓ.பி.சி) ஆகியோர் இந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ். வகை படுத்தும் என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும், மண்டல் கமிஷன் அமுல்படுத்த கோரி நடந்த போராட்டங்களை திசை திருப்பும் முகமாகவே பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது எனும் கருத்துக்கும் பதில் இல்லை.


பெண்களின் உரிமை பற்றி பேசும் ஆர்.எஸ்.எஸ். தனது உயர்பதவிகளில் எத்தனை பெண்களை அமர்த்தியுள்ளது? பாசிச சித்தாந்தத்தை தனது அடிப்படையாக கொண்ட ஆர் எஸ் எஸ் தேச பித்த மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயை ஆராதிப்பதன் மூலம் தீவிரவாதத்திற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்துகிறது.


மகளிர் முன்னேற்றத்திற்கு ஆதரவான சட்டங்களை கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக பாபா சாஹிப் அம்பேத்கரின் உருவ பொம்மையை எரித்ததன் மூலம் தனது ஆணாதிக்க தனத்தை பறைசாற்றியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு வெறுப்பு கருத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் மனுதர்மத்தை தங்களின் வேத நூலாக ஆராதிக்கும் சங்கிகள் சமீப காலம் வரை நாக்பூரில் உள்ள தங்கள் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்து கொண்டு தங்களை தேச பக்தர்கள் என அழைத்து கொள்வது வேடிக்கையான நிகழ்வு எனும் விமர்சனத்திற்கும் அவர்களிடம் பதில் இல்லை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.