50 முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.சில் தேர்வு !

இந்தியா

யூனியன் பப்லிக் சர்வீஸ் கமிஷன் என்ற மத்திய ஆட்சிப்பணிகளுக்கான ஐ ஏ எஸ், ஐ எப் எஸ் , ஐ பி எஸ் பணிகளுக்கான இறுதி கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 10, 99 மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களில் முஸ்லிம்கள் 50 பேர் ஆவர்.

காஷ்மீரை சேர்ந்த பிலால் முஹியித்தீன் பட் 10 வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டுகளை விட இவாண்டு அதிகமான முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு 36 முஸ்லிம் மாணவர்கள் தேர்வாகினர். 2015ம் ஆண்டு 38முஸ்லிம்கள் தேர்வாகினர். . 2014ல் 34பேரும் 2013ல் 30 முஸ்லிம்களும் தேர்வாகியுள்ளார்.


பிலால் உட்பட 9 முஸ்லிம்கள் டாப் 100 க்குள் இடம் பிடித்துள்ளனர். அதில் முஸம்மில் கான் 22ஆம் இடத்திலும் ஷேய்க் தன்வீர் ஆசிப் 25ம் இடத்திலும் ஹம்னா மர்யம் 28ம் ராங்கிலும் ஜாபர் இக்பால் 39ம் இடமும் மற்றும் ரிஸ்வான் பாஷா ஷேய்க் 48வது இடமும் பெற்றுள்ளனர். 17 முஸ்லிம்கள் டாப் 500 ரேங்கில் வந்துள்ளனர். தேர்வான மாணவர்கள் இந்திய ஆட்சிப்பணி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.


14சதவீதம் முஸ்லிம்கள் வாழும் இந்நாட்டில் ஆட்சிப்பணிகளில் முசுலிம் களுக்கான பிரதிநிதித்துவம் மிக குறைவான அளவே உள்ளது. ஆட்சிப்பணிகளில் வெறும் 2சதவீதம் மட்டுமே முஸ்லிம்களின் பங்கெடுப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கர்நாடகாவை சேர்ந்த நந்தினி முதலிடத்தை பெற்றுள்ளார்.பிற டாப் 4 இடங்களில் அன்மோல் ஷேர்சிங், கோபால கிருஷ்ணா, சவுமியா பாண்டே மற்றும் அபிலாஷ் மிஸ்ரா இடம் பெறுகின்றனர்.