புனே மென்பொறியாளர் முஹ்ஸின் ஷேய்க் கொலை நீதியும் நிவாரணமும் எங்கே? கொந்தளிக்கும் தந்தை

இந்தியா

2014 ல் வெறியர்களால் படுகொலை செய் யப்பட்ட மொஹ்சின் சேக் குடும்பத்துக்கு இன்றுவரை நீதியும் நிவாரணமும் கிடைக்கவில்லை .


முஹ்ஸின் ஷேக் நினைவிருக்கிறதா ? மோடி பிரதமராக பதவியேற்ற போது அந்த குற்றச்சாட்டின் உச்சக்கட்டமான கொண்டாட்டமாக (!) மதவாத பாசிச வெறியர்களால் கொன்று தீர்க்கப்பட்டவர் முஹ்ஸின் . மராட்டிய மன்னர் சிவாஜி சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோரை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் படங்கள் வெளியிட்டதாக கூறி பெரும் ரகளையில் ஈட்டுபட்டனர்.


நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் பொது சொத்துக்கள் சேதப் படுத்தப்பட்டன. புனேவில் பான்கார் காலனியில் உள்ள மஸ்ஜிதில் இஷா எனும் இரவுத்தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த சோலாப்பூரை சேர்ந்த முஹ்ஸின் ஷெய்க்கை அந்த ஹிந்த்த்துவ வெறிக்கும்பல் ஹாக்கி மட்டைகளையும் இரும்பு தடிகளையும் கொண்டு தாக்கி கொன்றனர் . கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அந்த இளைஞருக்கு விப்ரோவில் பணியிடம் கிடைத்தது. என்பது குறிப்பிடத்தக்கது. முஹ்ஸினோடு யூனுஸ் கான் என்ற இளைஞரும் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.


இந்த கொடூர சம்பவத்திற்கு பின் அன்றைய முதல்வர் பிரிதிவி ராஜ் சவாண் முஹ்ஸின் குடும்பத்திற்கு 5லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவரது தம்பி முபீன் ஷேய்க்க்கிற்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார், அவரது ஆட்சியிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.


அதன்பிறகு ஆட்சிக்கு வந்த பார்ப்பனர் தேவீந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியிலோ கேட்கவே வேண்டாம். முஸ்லிம்களை ஒடுக்கவே நேரம் போதாமல் தவிக்கும் அவர்களுக்கு முஹ்ஸின் குடும்பத்திற்கு நிவாரணமும் நீதியும் கொடுக்க மனதும் நேரமும் எங்கே இருக்கிறது? இந்நிலையில் 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது தொடர்பான தீர்ப்பு வரவேண்டிய சூழலில் முஹ்ஸினின் தந்தையார் முஹமது சாதிக் சேக் தானே பேசி வெளியிட்ட வீடியோவில் அரசுகளின் ஒரவஞ்சனையின் காரணமாக தனது மகனின் படு கொலைக்கு நீதியும் நிவாரணம் கிடைக்காத நிலையை தனது உள்ளக்குமுறல்களை அந்த ஒளி படக் கோர்வையில் கொட் டியுள்ளார் வெளிவர இருக்கும் தீர்ப்பில் தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தனது இளைய மகனுக்கு தருவதாக சொன்ன அரசு வேலையும் கிடைக்குமா?


தனது மகனுக்கு இம்மாத இறுதியில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறும் சாதிக் பொருளாதார நெருக்கடியில் சிரமப்படுவதாகவும் தனது மகன் முஹ்ஸின் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இளைய மகனுக்கு வாக்குறுறுத் அளிக்கப்பட்ட அரசு வேலை அளிக்கப்பட்டு இருந்தாலும் இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது.


2014செப்டம்பர் 5ம் தேதி சோலாப்பூரில் கூட்டப்பட்ட மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசில் நிவாரண நிதியில் இருந்து 3லட்சம் பெற முஹ்ஸின் ஷேய்க் குடும்பம் தகுதி உடையவர்கள் என முடிவெடுக்கப்பட்டது. 2016ம் ஆண்டு மராட்டிய மாநில தலைமை செயலகமான மந்திராலயத்திற்கு சென்றபோது ஒவ்வொரு முறையும் விதவிதமாக பதில்கள் எனக்கு கூறப்பட்டன ஜெகதீப் என்ற அதிகாரி எங்கள் கோப்பு காணாமல் போய்விட்டதாக கூறுவார். கோவிந்தராஜ் என்பவர் கூறுவார் எங்கள் கோப்பு வேலைகள் நடப்பதாக கூறுவார்.2016க்கு இடையில் மைனர் குற்றாளிகள் 2பேர் தவிர மற்றும் மூன்று குற்றவாளிகளுக்கு மும்பை உயர் நீதிமன்ற புனே கிளையில் பிணை மறுக்கப்பட்டது இரண்டு மைனர் குற்றவாளிகளுக்கு சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குள் பிணை வழங்கப்பட்டது.


2016 ஏப்ரல் மாதம் மற்றுமுள்ள மூன்று குற்றவாளிகளான ஷ§பனம் தத்ரேய, மகேஷ் மாருதி கோட், அபிஷேக் சவாண் இந்த மூவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இத்தனை பேரையும் ஏவிய முக்கிய சூத்ர தாரியான தனஞ்செய் தேசாய் என்ற சங்பரிவார் பயங்கரவாதியின் பிணை மூன்றாவது முறையாக மறுக்கப்பட்டது. ஆனால் மற்ற குற்றவாளிகள் சுதந்திரமாக உலவி வருகின்றனர். முஹ்ஸின் ஷேய்க் படுகொலைக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பது எப்போது? அவரது குமுறல் வீடியோ பதிவு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.