தலித் குடும்பவிழா மாட்டுக்கறி விருந்து குடியிருப்பில் புகுந்து தாக்கிய பஜ்ரங் தளத்தினர்

இந்தியா

கர்நாடகா மாநில உடுப்பி மாவட்ட குண்டாபூர் தாலுகா அங்கோடிக்கு அருகில் உள்ள திரசை அருகே திருமண உள்ள கோர்கா என்ற தலித் குடியிருப்பில் நிச்சசயதாரத்தை முன்னிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு மாட்டுக்கறி விருந்து நடத்தப்பட்டது.

ஏப்ரல் 24ம் தேதி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சகுந்தலா என்பவரின் சகோதரி வீட்டில் இரவு நடத்த மாட்டுக்கறி விருந்தின் போது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குண்டர்கள் விருந்தில் இருந்த அனைவரையும் தாக்கினர். ஹாரிஸ் என்ற 26 வயது வாலிபர் ஸ்ரீ காந்த் என்ற 19 வயது நபர், மகேஷ் என்ற 20 வயதுடையவர் ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டவர்கள் ஆவர். தாக்கியவர்கள் குருராஜ் ஆச்சார்யா, சுனில் பூஜாரி, சந்திரகாந்த் பூஜாரி என்ற பயங்கரவாதிகள் என அடையாள ம் காணப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்த அசகாய சூர போலீஸ் கொடும் காயம் விளைவித்து தாக்கியதோடு ஓயாமல் பாதிக்கப்பட்ட மூன்று தலித் இளைஞர்களையும் அங்கோடி காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர் அந்த பாசிச குண்டர்கள் .

அந்த காவிகளின் சொற்படி ஆடிய போலீஸ் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3நாட்களுக்குப்பிறகு விடுவிக்க ப் பட்டனர். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சகுந்தலா மதவெறி குண்டர்களின் மீது காவல்துறையில் புகார் அளித்தார் . அந்த சமூக விரோதிகள் இளைஞர்களை தாக்கியதோடு நில்லாமல் பெண்களையும் தலித் சமூகத்தையும் இழிவாக பேசியுள்ளனர். கோர்கா காலனியில் உள்ள அனைத்து மக்களையும் மாட்டுக்கறி இனி யாராவது சாப்பிட்டால் அதோ கதிதான் எனவும் எச்சரித்தனர். நடந்த சம்பவத்தை அனைத்து தலித் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புக்கள் கண்டித்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் காவிகளுக்கு இந்த துணிச்சலை கொடுத்தது யார் ?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.