ஆக்ரா: காவல்நிலையத்தை சூறையாடிய காவி பயங்கரவாதிகள்

இந்தியா

நாடெங்கும் பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நரவேட்டையாடி வரும் சங்பரி வார அமைப்புகள் மாட்டு வியாபாரிகளையும், பால் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளையும் தாக்குவதையும், கொல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.


நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் தாக்கப்படும் போதும் அவர்களது வாகனங்கள் சூறையாடப்படும் போதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இப்போது தனது தவறுக்கான பலனை அனுபவித்திருக்கிறது.


உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முஸ்லிம் வியாபாரிகளை தாக்கியதாக சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் மீது ஆக்ராவின் சதர் பஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐவரையும் விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றது.


இதையடுத்து பதேபூர் சிக்கி தொகுதியான் ஙியிறி விலிகி உதய்பான் சிங் தலைமையில் பாஜக, இந்து யுவவாஹினி, பஜ்ரங்தள், க்ஷிபிறி அமைப்பை சேர்ந்த 25 பேர் பதேபூர் சிக்கி மற்றும் சதர் பஜார் காவல்நிலையங்களை தாக்கி சூறையாடினர்.


மேலும் காவல்நிலையத்துகள் புகுந்து கைது செய்யப்பட்ட வர்களை விடுவித்ததோடு தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளரையும் சரமரியாக தாக்கியுள்ளனர்.
காவல்நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைக்க்க்கப்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. உதவி ஆய்வாளர் ஒருவரது துப்பாக்கியையும் வன்முறைக் கும்பல் பறிந்து சென்றது. உ.பி மாநிலத்தில் யோகி ஆதியநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாக நடைபெற்றுள்ள இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறை 200பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து15பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இனியாவது காவல்துறை விழித்துக் கொள்ளுமா?


தாஜ்மஹாலில் காவிகள் அட்டுழியம்.


கடந்த 23ம் தேதியன்று தாஜ்மஹால் வளாக்த்திற்குள் புகுந்த சங்பரிவார அமைப்புகளின் குண்டர்கள் காவிக் கொடிகளை அணிய சுற்றுலா பயணிகளை வற்புறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து அலறியடித்து கொண்டு ஒட்டம் பிடித்தனர். ரவுடிக்கும்பலை அடக்குவதற்கு வழி தெரியாமல் காவலர்கள் திகைத்து நின்றனர்.இது குறித்து பேசிய ஆக்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் விஷால் ஷர்மா, சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுக்காக்கப்பட்ட தேசிய சின்னங்கள் இருக்குமிடத்தில் இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் தங்களின் கீழ்ந்தரமான அரசியலை இது போன்ற மதிப்பு வாய்ந்த இடங்களில் செய்யாமலிருப்பது நல்லது என்று காட்டமாக கூறினார்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.