முஸ்லிம்களின் நாட்டுப்பற்றைக் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படங்களும், பாக். போரில் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற மாவீரர்களும்

இந்தியா

திரைப்படங்கள் காலத்தின் கண்ணாடியாக மக்களின் வாழ்வியலை அழுத்தமாக சொல்லும் ஒரு வலிமையான சாதனமாக , வாகனமாக திகழவேண்டும் .

அடுத்தவனின் சிந்தனையை சுரண்டி வென்று தின்று கொழுத்து அதன்பின்னர் எதற்கும் வழியில்லாமல் போனபின்னர் சிந்தனை வறண்டு எத்தை தின்றால் பித்தம் தணியும் என்ற தவிப்புக்கு ஆளாகி வெறுப்பு பரப்புரைக்கு ஆள் பிடிக்கும் நோக்கில் தேவையே இல்லாமல் மக்களிடையே பிளவூட்டி குறிப்பாக சிறுபான்மை மக்கள் மீது களங்கத்தினை சுமத்தும் விதமாக படம் எடுத்து அதனையே தேசியம் என்றும் தேசப்பற்று என்றும், திட்டமிட்டு பரப்பி குறுகிய நோக்கம் கொண்ட சிலரால் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என்ற பெயர் சூட்டப்படும் அவலம் நிகழ்கிறது . தமிழர்களை எப்போதும் கிண்டலடித்து வரும் கன்னட அர்ஜுன் தன்னை இனம் கண்டுபிடித்து விடக்கூடாதே என்பதற்காக நாட்டுப்பற்று , ஜெயஹிந்த் என நாடகமாடுவதும் உலக சினிமாக்களைக் காப்பியடிப்பதாலே உலக நாயகன் என்றும் ஆஸ்கர் விருது தான் தனது லட்சியம் என்று கூறிக்கொண்டு ஆஸ்கார் வாங்காத நிலையிலும் ஆஸ்கார் நாயகன் என தனக்கு தானே பேர் சூட்டிக்கொண்டு பெருமை அடிப்பவர்கள் வாழும் கால கட்டத்தில் மக்கள் இவர்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தும் கூட தம் பரம்பரை புத்தியை விடுவதாக இல்லை

இரண்டு ஹிந்தி திரைப்படங்கள்

அண்மையில் முல்க் என்ற படம் வெளியானது அது 1974ல் வெளியான கரம் ஹவா படத்தை நினைவு படுத்துகிறது. இரண்டுமே இந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்றையும் நாட்டில் அவர்களுக்கான இருப்பை கேள்விக்குரியதாக்கி இருக்கிறது.

கரம் ஹவா நாட்டுப்பிரிவினைக்கு பின்பு ஆக்ராவை கதைக்களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். சகோதரர்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தபின் நாட்டைவிட்டு போகமாட்டேன் என பிடிவாதமாக வாழ்ந்து கொண்டு வரும் சலீம் மிர்ஸாவை வலுக்கட்டயமாக வெளியேற்ற முயற்சிகள் நடக்கின்றன.

முல்க் இன்றைய வாரணாசி குறித்து கூறுகிறது. முராதாக நடிக்கும் ரிஷி கபூரின் நாட்டுப்பற்று குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. காரணம் அவரது உறவுக்கார இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி விட்டார்களாம். இரண்டு படங்களுமே ஒரே மாதிரியான நீண்ட கேள்வியை வைக்கின்றன. இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொரு நொடியும் தங்கள் நாட்டுப்பற்றை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும் அல்லது அவர்கள் மீது நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்புணர்வு அவர்கள் மதத்தின் காரணமாக வெறுப்புணர்வு ஏற்படத்தான் செய்யும் என சண்டித்தனமாக வாதம் எழுப்புகிறது.

தீவிரவாத செயலுக்கு ஒட்டு மொத்த சமூகத்தை களங்கப்படுத்த முடியாது அது தனி நபரின் செயலாக கருதப்பட வில்லை. ஆனால் இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று யாராலும் நெருங்கவே முடியாத தீரமும் தூய்மையும் வாய்ந்தது ராணுவத்தில் குறைந்த விழுக்காட்டில் இருந்த போதிலும் அவர்களது தியாகம் அளப்பரியது என்பதை ஆதாரப்பூர்வமாக ஆவனப்பூர்வமாக நிறுவ முடியும்.

பிரிகேடியர் உஸ்மான்

இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவின் உயர் அதிகாரி 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் நாட்டை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற நிலையில் போர்க்களத்தில் 35ஆவது வயதில் தன் இன்னுயிரை தியாகம் செய்தார். அவரது மறைவுக்குப்பிறகு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான மஹா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது . இது எங்கும் பெரிதாக பேசப்படவில்லை மாவீரர் உஸ்மானின் தியாகம், வீரம் நினைவு கூறப்படாத நன்றிகொன்றவர்களா120 கோடி இந்தியர்கள் ?

வரலாற்றில் சில முக்கிய பக்கங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியாக ஜீஷீக்ஷீuஜீஜீமீக்ஷீளீணீ வாருங்கள் என ஜின்னாவால் பலமுறை அழைக்கப்பட்ட போதும் அதனை மறுத்தவர் பிரிகேடியர் உஸ்மான். தாம் மதசார்பற்ற இந்தியாவுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளதாக கூறி மறுத்தார் . சேவை மட்டுமா செய்தார் ? தன் உயிரையே தியாகம் செய்துவிட்டார் அல்லவா?

புத்தி சாதுர்யமும் தீரமும் கொண்ட உஸ்மான் இளவயதில் கொல்லப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவின் முதல் முஸ்லீம் ராணுவ ஜெனரலாக இருந்திருக்க கூடும்.

ஹவில்தார் அப்துல் ஹமீத் (1965)

எரிகுண்டு வீசும் படைப்பிரிவை சேர்ந்த ஹவில்தார் அப்துல் ஹமீத் ஒற்றை கையினால் ஆயுதங்களை அனாயசமாக பயன்படுத்துபவர் . பின்வாங்குதல் என்பது அவரது அகராதியிலேயே இல்லை . தமது அறிவாற்றல் மற்றும் திறனால் ஹேம் கரண் போர்க்களத்தில் பாகிஸ்தானின் 6 கவசவாகனங்கள் எனும் பேட்டன் டாங்குகளை துவம்சம் செய்தார். பாகிஸ்தானின் 7வது டாங்கை அழிக்கும் போது எதிரிகளால் சல்லடையாய் துளைக்கப்பட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்தார். அப்துல் ஹமீதுக்கும் மறைவுக்குப்பிறகு ராணுவத்தின் முதன்மை உயர் விருதான பரம் வீர் சக்ரா விருது 32வயதில் வழங்கப்பட்டது .


கேப்டன் ஹனீபுதீன்

ராஜபுதனா ரைபிள்ஸ் படைப்பிரின் கேப்டன் ஹனீப் 18 ஆயிரத்து 500 அடிகள் உயரத்தில் ராணுவ முக்கியத்துவம் மிகுந்த மலை சிகரத்தை எதிரிகளிடம் இருந்து கைப்பற்றியும் வெற்றி களிப்பில் எதிரிகளால் குறிவைத்து கொல்லப்பட்டார் .25 வயதில் கார்கில் போரில் இந்நாட்டிற்காக இன்னுரை இழந்த கேப்டன் ஹனீப் பெயர் அந்த பகுதிக்கு சூட்டப்பட்டது வெற்றியும் வீரமும் விசுவாசமும் நேசமும் கொண்ட ஒரு வீரப்பரம்பரையைத்தான் தண்ட சோறுண்ணும் ஒரு வீணர் கூட்டம் இழிவு படுத்துகிறது

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.