இந்திய அரசு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அயல்நாட்டு தலைவர்கள் நடுவில் சர்ச்சை பேச்சு பேசி இஸ்ரேலிய பிரதமர் புன்யாமின் நெதன்யாஹ§ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தலைவர்கள் நடுவே மட்டும் ரகசியமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் தவறுதலாக (அல்லது வேண்டுமென்றே ?) ஒலிபெருக்கி வெளியே பேச்சு கசிந்து காத்திருந்த செய்தியாளர்கள் மட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல் அவிவ் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

லண்டன் மாநகரம் மேற்கு பகுதி நள்ளிரவு அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது க்ரீன் பெல் டவர் என்ற 24 அடுக்கு மாடிகளை கொண்ட இரண்டு கட்டிடங்களில் திடீரென தீ பற்றியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையான கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை 2017 க்கான இறுதி போட்டி நடந்தது. ஜூன் 18 ஆம் நாள் இந்த போட்டி லண்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் போர்களம் போல சித்தரிக்கப்படுவது வழக்கமான நிகழ்வு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஷேய்க் முகமது பின் ஜயீத் பள்ளிவாசல் மர்யம் உம்மு ஈஸா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கிறிஸ்தவ முஸ்லிம் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த பெயர் சூட்டல் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முஸ்லிம்களின் மூன்றாம் கிப் லாவான அல் அக்ஸா வில் வழக்கத்தை விட சிறப்பாக ரமலான் நல்லறங்கள் நிறைவேற்றப்பட்டன மூன்று லட்சம் பாலஸ்த்தீனர்கள் ரமலான் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளில் அல் அக்ஸா வளாகத்தில் தொழுகை நிறைவேற்றினார்கள்.

அல்அக்ஸா வளாகமே மக்கள் திரளால் நிறைந்தது . அதுமட்டுமின்றி ஜெருசலேம் நகரத்தையே திணறடித்தது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசு பலத்த போலீஸ் கெடுபிடியுடன் முஸ்லிம் மக்களிடம் நடந்து கொண்டது .

ரமலான் மாதம் மட்டும் ஆக்கிரமிப்பு

இஸ்ரேல் அரசு அல் அக்ஸா மஸ்ஜிதுக்கு வருபவர்களை அவ்வளவாக கெடுபிடி செய்வதில்லை என பொதுவாக கருதப்படுகிறது அதாவது ஆண்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களையும் ஆண் குழந்தைகளில் 12 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி . பெண்களுக்கும் முதியவர்களுக்கும் எந்த கெடுபிடியும் இல்லை. அவர்கள் எளிதாக சோதனை சாவடிகளை கடந்து செல்லலாம்.


எல்லா பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ஜெருசலேம் நகருக்குள் நுழைய 4 மணி நேரத்துக்கும் அதிகமானது என மேற்குக்கரை நபுலஸ் நகரை சேர்ந்த 52 வயது சலீம் அப்துல்லா கூறினார். பாலஸ்தீன மேற்குக்கரை பகுதி முற்றுகையிடப்பட்டுள்ள காசா , மற்றும் ஜெருசலேமில் உள்ள அரபு சமூக மக்கள் 2.5 லட்சத்திலிருந்து 3லட்சம் வரை திரண்டனர் என குறிப்பிடும் அல் அக்ஸா தொடர்பான அறக்கட்டளை பொது இயக்குனர் ஷேய்க் அல் ஹாதிப் தராவீஹ் தொழுகைக்கு மட்டும் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்து ஒன்றரை லட்சம் மக்கள் வருகை தருகின்றனர் என்கிறார்.


மேற்குக்கரை ஜெனின் நகரை சேர்ந்த 40 வயது சலீம் சபானா கூறும் போது தான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் என நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் மனைவி மற்றும் இரண்டு புதல்விகளுடன் வந்த அவர் ஜூம்முஆவுக்கு பிறகு பல மணிநேரங்கள் கழித்து தராவீஹ் தொழுகையும் நிறைவேற்றிவிட்டு செல்வோம் என்றார் அவரது 12 வயது மகள் அல் அக்ஸா மஸ்ஜித் மிக அழகு நிறைந்ததாக உள்ளது . ரமலானின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு வந்து தொழுகை நிறைவேற்றவேண்டும் என ஆவலாக உள்ளது . எனது தந்தையும் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்கிறது அந்த பெண் குழந்தை.


1967 ல் நடந்த போரில் மேற்கு கரையையும் கிழக்கு ஜெருஸலத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது . 1980ல் மேற்கு ஜெருஸலத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியதை தொடர்ந்து அல் அக்ஸா மஸ்ஜித் வளாகம் தொடர்ந்து தகிப்பிலேயே உள்ளது. ஒன்று பட்ட ஜெருசலேம் தங்களின் யூத நாட்டின் கனவு தலைநகரம் எனக்கூறி வரும் சியோனிஸ சக்திகள் அதனை நிலை நிறுத்தி பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேலின் இந்த தகாத ஆசையை சரவதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை .அமெரிக்காவின் நேற்றைய அதிபர் ஒபாமா கூட இதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரமலான் மாதத்தில் உம்ரா கடமையினை நிறைவேற்றிட ஆண்டு தோறும் மக்கள் திரள் அலை மோதுவது வழக்கம் இவ்வாண்டு அதிக பட்சமாக 80 லட்சம் முஸ்லிம்கள் புனித உம்ரா நிறைவேற்றினர்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.