இந்திய முஸ்லிம்களை பேணி பாதுகாக்க வேண்டும் மோடிக்கு ஒபாமா அறிவுரை

உலகம்

அமெரிக்காவின் 44வது அதிபராக இருந்த பராக் ஹ§சைன் ஒபாமா இந்திய முஸ்லிம்கள் குறித்தும் அவர்களை மோடி அரசு பேணி பாதுகாக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

பதவி விலகிய ஒரு முன்னாள் அதிபர் ஒருவர் இந்தியாவில் விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வில் இவ்வாறு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் மட்டுமல்ல வரலாற்று ரீதியாகவும் பலமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தன் நாட்டில் வாழும், தங்களை இந்தியர்களாகவே கருதும் முஸ்லிம் பெருமக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு கருத்தரங்கில் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் இந்தியா பற்றி குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒபாமா, இந்தியாவுன் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை ஒருங்கிணைந்தது, தங்களை இந்தியர்களாக கருதக்கூடியது. இது துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் கைகூடுவதில்லை.“எனவேதான் இந்தியா தனது முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். எப்போதும் இதனை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்” என்றார்.


அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடனான தனது உறவு, பயங்கரவாதம், பாகிஸ்தான், ஒசாமா பின் லேடனுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசினார். பின்னர், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, இந்தியா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:


இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் மிகப் பெரியதும் ஒன்றுபட்டதுமாகும். இங்குள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர். வேறு சில நாடுகளில் இதே நிலை இருப்பதில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். எனவே, இந்தியா தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கருதுகிறேன் என்றார் ஒபாமா.


மோடியிடம் பேசியது என்ன?


மேலும், கடந்த 2015, ஜனவரி மாதம் தாம் இந்தியா வந்திருந்தபோது, 'மத சகிப்புத் தன்மையும், ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கடைபிடிப்பதற்கு உள்ள உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்' என்று பிரதமர் மோடியுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியிருந்ததாக ஒபாமா தெரிவித்தார். அதற்கு மோடியின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பது குறித்து, அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஒபாமா தெரிவித்துவிட்டார்.


காந்தியே அதிர்ச்சி அடைந்திருப்பார்


இந்தியாவில் மத சகிப்புத் தன்மை இல்லாததை காண நேர்ந்தால், அந்நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காந்தி அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியக் குடியரசு தின விழாவில், மனைவி மிச்சேலுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனது இந்தியப் பயணம் குறித்து, தலைநகர் வாஷிங்டனில் ஒபாமா பேசியது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இந்தியா ஒரு ஆச்சரியப்படத்தக்க, மிகவும் அழகான நாடு. அங்கு பல்வேறு வேற்றுமைகள் காணப்படுகின்றன.


இந்தியாவில், அனைத்து வகையான மத நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள் உள்ளிட்டவை நீண்ட காலமாக நடந்து வருகிறது. இவற்றின்மீதுள்ள தங்களது நம்பிக்கை, மரபு காரணமாக ஒருசாரார் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.


இந்தியாவில் மத சகிப்புத் தன்மை இல்லாததை காண நேரிட்டால், சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியே அதிர்ச்சி அடைந்திருப்பார். ஒரே குழுவாக, அல்லது மதமாக இருப்பதற்கு நம்மால் முடியாது. நமக்கென தனி விருப்பங்கள் உண்டு. நல்லனவற்றை செய்வதற்கு நம்முடைய நம்பிக்கைகள் காரணமாக உள்ளதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதே நம்பிக்கை, நேர் வழியில் இருந்து மாறுபட்டு, சில சமயங்களில் நாம் ஆயுதமாக பயன்படுத்தப் படுவதையும் காண்கிறோம். பாகிஸ்தானின் பள்ளியில் இருந்து, பாரீசின் தெருக்கள் வரைக்கும் வன்முறைகள் நடந்திருப்பதை பார்த்தோம். அவற்றை செய்தவர்கள், தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக, இஸ்லாத்துக்காக இவற்றை செய்தோம் என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறார்கள். இவ்வாறு ஒபாமா பேசினார்.


அரங்கத்தில் பேசியது என்ன?

இந்திய சுற்றுப் பயணத்தின்போது, தனது கடைசி நாள் நிகழ்ச்சியில் டெல்லி சிரி போர்ட் அரங்கத்தில் பேசினார் ஒபாமா. அப்போது, ‘‘மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும்வரை இந்தியா தொடர்ந்து வெற்றியடையும். எல்லா நாடுகளிலும் மத சுதந்திரத்தை காப்பது அரசின் கடமை, தனிமனிதனின் கடமை. ஆனால் மதநம்பிக்கையை காக்கும் பெயரில், சிலர் வன்முறையில், தீவிரவாதத்திலும் ஈடுபடுவதை உலகின் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். மதத்தின் பெயரால் நம்மை பிரிக்கும் முயற்சியை நாம் அனுமதிக்கக் கூடாது“ என்று பேசினார்.


2015ல் குடியரசு தினவிழா விருந்தினராக வந்தபின்னர் இந்தியாவின் மதசகிப்பின்மையை கண்டால் காந்தியாரே அதிர்ச்சி அடைந்திருப்பார் என அப்போதும் கூறினார். தற்போது பசுக்குண்டர்கள் படுகொலைசெய்தல், லவ்ஜிஹாத் என்றபெயரில் வன்முறை விஷமம் தொடர்வதைக்கண்டே அண்மை விஜயத்திலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். மோடி அரசும் மாறவில்லை ஒபாமாவும் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை ஒபாமா தமது கருத்தை வேறு வார்த்தைகளில் கூறி உள்ளார் அவ்வளவே. இதில் ஆட்சியாளர்களுக்கு பாடம் இருக்கிறது.