டொனால்டு டிரம்ப்பின் ஓராண்டு நடவடிக்கைகள்:

உலகம்

டொனால்டு டிரம்ப்பின் ஓராண்டு நடவடிக்கைகள்:அமெரிக்க அதிபர்கள் உலகத்தை கட்டி ஆள்பவர்கள்.இரு நூறு ஆண்டுகள் கடந்த அமெரிக்க குடியரசில் கடந்த வருடம்(நவம்பர் 9,2016) டொனால்டு டிரம்ப் மிக வினோதமான அதிபராக வந்தார்.முன்னால் குடியரசு தலைவர் பில் கிளிண்டன் மனைவி கிலாரி கிளிண்டனை எதிர்த்து வெற்றி பெற்றார்.இதனால் ஒரு பெண் அமெரிக்க அதிபராகும் முதல் வாய்ப்பு தள்ளிப்போனது.டிரம்ப் வெல்வார் என்று அமெரிக்க மக்களே எதிர்பார்க்கவில்லை.அமெரிக்க தேர்தல் முறை காரணமாக டிரம்ப் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டது.குடியரசு கட்சி இரண்டுமுறை வெற்றி பெற்று ஒபாமா அதிபராக இருந்ததும் கூட காரணமாக இருக்கவில்லை. டிரம்ப்புக்கு கிடைத்த வாக்குகள் 37 விழுக்காடு தான். 70 ஆண்டுகளில் மிக குறைவான வாக்காக 37 % பெற்றது டிரம்ப் தான்.அமெரிக்க வாக்காளர்கள் டிரம்ப் வெற்றியை கண்டு ஆச்சர்யப்பட்டார்கள்.அவர்கள் டிரம்ப்க்கு வாக்களித்ததாக நினைக்கவில்லை.

டிரம்ப்க்கு இந்திய வம்சாவழி அமெரிக்கர்கள் வாக்களித்தார்கள். டிரம்ப்க்கு அங்குள்ள உயர்சாதி இந்துக்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளிடத்தில் செல்வாக்கு இருந்தது.டிரம்ப்க்கு இந்தியாவின் பல நகரங்களில் சொத்து வர்த்தகம் இருக்கிறது.டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு தொலைபேசியில் அழைத்து பேசிய இரண்டாவது வெளிநாட்டு தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

ஊழல் குற்றச்சாட்டு: அதிபரான டிரம்ப் தனது காமிக்ஸ் நாடகங்களை உடனடியாக தொடங்கினார்.ஒபாமா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ‘ஒபாமாகேர்’ எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கைவைத்தார்.இதனிடையே,டிரம்ப். வெற்றியில் ரஷ்ய உளவு அமைப்பின் உதவி இருந்தது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஒரு குண்டை வீசியது.டிரம்ப் கலகலத்துப் போனார்.டிரம்ப், உதவியாளர் ஒருவருடன் சேர்ந்து கருப்பை வெள்ளையாக்கும் பண மோசடி செய்ததாகவும் சதி மற்றும் இதர குற்றங்கள் செய்ததாகவும் விசாரணை அதிகாரி ரோபர்ட் முல்லர் மற்றும் டிரம்பின் தேர்தல் பிரச்சார முன்னால் நிர்வாகி பால் மானாஃபோர்ட் (Paul Manafort) ஆகி யோர் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகள் டிரம்பை மிரட்டின.எஃப்.பி.ஐ.தலைவர் ஜேம்ஸ் கோமே அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது பற்றி விசாரணையை மேற்கொண்டார்.2017 மே 9 ல் கோமேயை டிரம்ப் நீங்கினார்.

பாரீஸ் பருவ மாறுதல் ஒப்பந்தம் வாபஸ்: ஒபாமா ஆட்சியில் பாரிஸ் நகரில் வைத்து பருவமாற்றம் குறித்த ஒப்பந்தம் நடைபெற்று இருந்தது. வளர்ந்த நாடுகள்,வளரும் நாடுகள் வெளியிடும் கார்பன் அளவை மட்டுப்படுத்தும் உடன்படிக்கை அது. தான் அதிபரானால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் மிரட்டிக் கொண்டிருந்தார்.சொன்னது போலவே, ‘பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை முடக்குவதால் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாக’ 2017 ஜூன்1 ல் அறிவித்தார். ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வர 90 நாட்கள் தடையும் அகதிகள் அமெரிக்கா வர 120 நாட்கள் தடையும் விதித்து 2017 ஜனவரி 27 ல் அறிவிப்பு செய்தார்.டிரம்பின் இந்த அறிவிப்பு உலக முஸ்லிம் மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்த தடையாணை அமெரிக்க அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்று ரத்து செய்தது.டிரம்ப் அரசு இந்த தடையாணையை அமல்படுத்த நீதிமன்றத்தில் கடுமையாக போராடி இறுதியில் தோல்வியடைந்தது.

வடகொரியாவுடன் வம்பு: வட கொரியா அதிபர் கிம் ஜோங்க் உன்னை பார்த்து லிட்டில் ராக்கெட் மேன் என்று கிண்டலடித்தார் டிரம்ப். வட கொரியா அணுகுண்டு சோதனை செய்த போது கொரியா அமெரிக்காவை மிரட்ட இந்த சோதனை செய்வதாக வாஷிங்டன் குற்றம்சாட்டியது.அணு ஆயுதம் கொண்டு அமெரிக்காவை மிரட்டினால் வடகொரியா இதுவரை காணாத அழிவை சந்திக்கும் என்று டிரம்ப் மிரட்டினார்.பதிலுக்கு ஜோங் உன்,அமெரிக்கா எங்களிடம் வம்புவைத்தால் அமெரிக்காவை தாக்குவோம் என மிரட்டினார்.

கருப்பர் பிரச்சனை: அமெரிக்காவில் கருப்பர் இனத்தவர் மீது வெள்ளை வெறியர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாகவும் பரவலாகவும் நடக்கும் பிரச்சனை.டிரம்ப் தனது காலத்தில் நடந்துவரும் தாக்குதல்களை கண்டிக்கவில்லை.பல தரப்பினரும் தாக்குகிறார்கள் என்று மழுப்பினார்.

ஓபாமா கேர்: ஒபாமா கேர் என்பது அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம்.ஒபாமா கொண்டுவந்து தனது பெயரில் வைத்துக்கொண்டார். ஒபாமா பேரை நீக்கி ரிப்பப்ளிக்கன் ஹெல்த் கேர் என்று ஆளும் கட்சியின் பெயரில் டிரம்ப் கொண்டுவந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செனட் சபைக்கு கொண்டுபோகவே ஆதரவு கிட்டவில்லை.

மெக்சிகோ சுவர்: மெக்சிகோ நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் மெக்சிகோ நாட்டவரை தடுக்கும் வகையில் இரு நாட்டு எல்லையில் கட்டப்படும் சுவர்.தான் ஆட்சிக்கு வந்தால் சுவர் எழுப்புவதாக தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.டிரம்ப் போட்டது 12 பில்லியன் டாலர்கள்.ஆனால் தற்போது 21.5 பில்லியன் டாலர்கள் தேவை என நாடாளுமன்றம் மதிப்பிட்டு இருக்கிறது.சுவர் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஈரானுடன் உறவு: ஈரானும் அமெரிக்காவும் ஒபாமா காலத்தில் அணு ஒப்பந்தம் செய்தன.இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த பகை மூட்டம் விலகியது.டிரம்ப் அதிபரானதும் ஈரான்-அமெரிக்கா அணு ஒப்பந்தத்தை வெளிப்படையாக விமர்சித்தார். அதே நேரம், ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதில்லை, குறைந்தபட்சம் தற்காலிகமாக, என்றும் டிரம்ப் கூறினார்.

வர்த்தக உறவு: வட அமெரிக்க தாராள வர்த்தக கழகம் (North American Free Trade Association) அமெரிக்காவுக்கு பேரழிவு என்றும் டிரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப்(TPP) ஒப்பந்தத்தை நிறுத்துவேன் என்றும் கூறினார்.பதவியேற்ற சில நாட்களில் டி.பி.பி யில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்.வட அமெரிக்க தாராள வர்த்தக கழகத்துடன் மறு பேச்சு நடத்துவேன் என்றுள்ளார்.
வெளிநாட்டினர் வெளியேற்றம்: அமெரிக்காவில் 1 கோடியே 13 லட்சம் பேர் நுழைவு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்காவை விட்டு போக வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இதனை மாற்றிக் கொண்டு குற்ற வழக்குகள் உள்ள 20 முதல் 30 லட்சம் பேரை மட்டும் வெளியேற்றப் போவதாக கூறினார்.
டிரம்பின் சொத்து மதிப்பு: டிரம்பின் சொத்து மதிப்பு 2016 முதல் 2017 செப்டம்பர் வரையில் 3.1 பில்லியன் டாலராக இருந்தது. தேர்தல் பிரச்சாரம் செலவு மற்றும் சொத்து வர்த்தகம் முடக்கம் காரணமாக 600 பில்லியன் டாலராக குறைந்து விட்டது.அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 92 வது இடத்துக்கு நகர்ந்திருக்கிறார் என்கிறது போர்ப்ஸ் பத்திரிகை.

பொருளாதாரம்: 2017 காலாண்டில் டிரம்ப் எதிர்பார்த்த 3 விழுக்காடு இலக்குக்குக்கு எதிராக 2.6 விழுக்காடு தான் உயர்ந்தது.

வேலைவாய்ப்பின்மை: ஜூலையில் 4.3 விழுக்காடு இருந்தது.2001 ல் இருந்து கணக்கிடும் போது இது மிக குறைவு.வெளிநாட்டவர்கள் வேலைக்கு செல்லும் எச்1 பி விசா வுக்கு கெடுபிடிகள் செய்தார்.இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.2018 ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா போகும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. ஐந்தாண்டுகளில் இது மிகப் பெரிய வீழ்ச்சி.இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக் கினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 2016 டிசம்பர் முதல் 2017 மார்ச் வரையில் 10 மடங்கு அதிகரித்ததாக ஞிமீறீஷீவீttமீ என்கிற வேலைவாய்ப்பு தேடி தரும் கன்சல்டிங் நிறுவனம் தெரிவிக்கிறது.

சுற்றுலா மந்தம்: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் எண்ணிக்கை 40 லட்சத்து 30 ஆயிரமாக குறைந்தது. வருவாய் இழப்பு 7.4 பில்லியன் டாலர்கள்.

தீவிரவாதம்/துப்பாக்கி சூடு: அமெரிக்க வரலாற்றில் மிக மோசம் என கூறப்பட்ட 2017 அக்டோபர் 1 லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு மற்றும் அக்டோபர் 31 நியூயார்க் வேன் தாக்குதல் சேர்த்து 362 தாக்குதல்கள். தீவிரவாத்த்துக்கு எதிராக கடுமைகாட்ட பாகிஸ்தானுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்தார்.ஆப்கனில் இருந்து படைகள் வாபஸ் இல்லை என்று கூறிவிட்டார்.

இந்திய உறவு: தெற்காசிய பகுதியில் சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்க திட்டத்தில் இந்தியா முக்கிய பங்காளி.வாஷிங்டனிலும் புது தில்லியிலும் மோடியும் டிரம்பும் சந்தித்து கொண்டு இரு உறவுகளையும் உறுதிப்படுத்துவதாக கூறினார்கள்.இருந்தும், பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை.

சுட்டுரை: மோடியும் டிரம்ப்பும் சுட்டுரை போடுவதில் வல்லவர்கள்.2016 நவம்பர் 8 முதல் 2017 நவம்பர் 8 வரையில் நாள் ஒன்றுக்கு 7 வீதமாக 2,474 சுட்டுரைகள் போட்டுள்ளார்.அதில் கிரேட் (456),ஃபேக் நியூஸ்/மீடியா (167),ஜாப்ஸ் (94),ஒபாமா கேர் (77) வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.