இந்துத்துவாவுக்கு எதிராக அமெரிக்க நகரங்களில் போராட்டம்

உலகம்

அமெரிக்காவில் வாழும் இந்தியர் உட்பட அனைத்து பிற சமூகத்தவர்களும் இணைந்து இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் நடத்தும் வன்முறைகள் படுகொலைகளை கண்டித்து நவம்பர் 17 அன்று(2017) ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இந்திய மத்திய அரசில் 2014 ல் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு மதவாத அரசு அமைந்த பிறகு தலித்துகள்,சிறுபான்மை மக்கள்,மதசார்பற்ற சக்திகள், பெண்கள்,எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் நடக்கின்றன. தபோல்கர், கல்புர்கி,பன்சாரே, கௌரி லங்கேஷ் முதலான எழுத்தாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.கொலையாளிகளை இதுவரையில் கைது செய்ய முடியவில்லை.

சமீபத்தில் கமல்ஹாசன் காவி பயங்கரவாதம் இருப்பதாக சொன்னதற்கு ஒரு குழந்தை கமல் படத்தை கத்தியால் குத்தி சிதைப்பதை படமெடுத்து சமூக வலை தளங்களில் பரவவிட்டார்கள்.பத்மாவதி படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோன் தலைக்கு 5 கோடி தருவதாக ஒரு சாமியார் கூறுகிறார்.இவ்வாறு விமர்சனம் செய்பவர்களை ஒடுக்க மிரட்டும் பாணியை கையாளுகிறார்கள்.அரசோ, பிரதமரோ கண்டிப்பது இல்லை. இந்தியாவில் பெருகி இருக்கும் இந்த அவல நிலையை கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க்,சிகாகோ,போஸ்டன் நகரங்கள் உட்பட பல்வேறு நகரங்களில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கண்டன கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள்.இந்துத்துவ ஆதிக்க சக்திகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.Alliance for Justice and Accountability(AJA)  என்ற அமைப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்தது. இந்த போராட் டத்தில் மனசாட்சி கொண்ட மக்கள் பல்வேறு இனத்திலிருந்தும் கலந்து கொண்டார்கள்.


நியூயார்க் நகரத்தில் டாக்டர் ஷேக் உபைது என்பவர் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.”இந்தியாவில் மதவெறிக்கு பலியானவர்களுக்கு இந்த போராட்டத்தை அற்பணிப்ப தாக”கூறினார்.” அரசுக்கு எதிராக துணிந்து நின்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர் கள், கலைஞர்கள், விருது களை திருப்பி அளித்தவர்கள் அனைவருடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்றார் உபைது. போராட்டக்கார்ர்கள் கை களில் கண்டன வாசகம் கொண்ட அட்டைகளை பிடித்திருந்தனர். இந்தியாவில் வறுமை ஒழிப்பும்,சமூக ஒற்றுமையும் தேவைப்படும் நேரத்தில் நாட்டில் மதச்சார் பின்மையை குழைத்து,மதப் பதட்டத்தை பற்றவைக்கும் வளர்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்தியாவில் நடக்கும் மத வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அத்துனை பேரும் பாரிஸ் நகர பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறினார்கள்.


பயங்கரவாதிகள் தாக்கு தலில் பாரிஸ் நகரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களையும் நியூயார்க் போராட்டக்காரர்கள் தங்களுடன் இணைத்து கொண்டார்கள்.பாரிஸ் மற்றும் பெய்ரூட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். United National Antiwar Coalition  எனும் ஐ.நா.அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதி ஜோ லொம்பர்டோ (Joe Lombardo)  போராட்டக் களத்தில் உரையாற்றினார். போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் வெளிப்படையான ஆதரவினால் தான் தலித்துகள் மற்றும் மத சிறுபான்மையோர் மீதான நூற்றுக்கணக்கான தாக்குதல்கள், தேவாலயங்கள் சேதம் நடக்க காரணம்.


சீக்கியர்களின் வேத நூல் சேதப்படுத்தப்பட்டதால் பஞ்சாபில் பதட்டம் ஏற்பட்டது.இந்து தேசியவாத அமைப்புகள் கிறித்தவர்களையும், முஸ்லிம் களையும் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்.பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை பரவலாக 9.2 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது என்று தேசிய குற்றபதிவு ஆவணம் தெரிவிக்கிறது. கிரீன் பீஸ்,ஃபோர்ட் ஃபவுண்டேஷன் உட்பட 13000 தொண்டு நிறுவனங்கள்,ஆம்னஸ்டி இன்டர்னேஷனல் மற்றும் பல மனித உரிமை அமைப்புகளுக்கும் நிதி வருவதை அரசே முடக்கி உள்ளது.இந்தியாவின் மக்கள் சமூகத்தை படிப்படியாக சீர்குலைக்கும் செயலாக இருக்கிறது என்று கூறுகிறது. அமெரிக்க நகரங்களில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள்,“மோடி அரசு வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலை மதசார்பு அரசியலாக மாற்றுகிறது என்ற விவாதத்தை இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் கிளப்பி விட்டிருக்கிறது என்று கியிகி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சனா குத்புதீன் கூறி இருக்கிறார்.


“கல்வி மற்றும் கலாச்சார அமைப்புகளில் இந்துத்துவா கொள்கை உடையவர்கள் பொய்யான சான்றாவணங்கள் மூலம் நியமிக் கப்படுகிறார்கள். இதனால் பாட நூல்கள் திரிக்கப்படுகின்றன.வெறுப்புணர்வுகள் தூண்டப் படுகின்றன. தலித்து களுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் எளிதாக்கப்படுகின்றன.இதனை தடுத்து நிறுத்தாவிடில்,இந்தியா இருள் மண்டிய சமூகமாக சீரழிந்து போகும். பின்னர் இந்துத்துவ சக்திகள் வகுத்தளிக்கும் எல்லைக்குள் தான் தலித்துகள், சிறுபான்மையோர், பெண்கள் செயல்பட வேண்டிய நிலை வரும்” என்று சிகாகோ நகரில் போராட்டத்தை ஒருங்கிணைத்து பேசிய பர்மிந்தர் சிங் கூறியுள்ளார்.


போராட்டக்காரர்களின் கோரிக்கை: 1.பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாடு சுற்றுப்பயணங்களை நிறுத்திவிட்டு மதம், சிந்தனை,சுதந்திரம்,சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் ஆகிய அம்சங்களில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் பாதுகாப்பை சொல்லாலும் செயலாலும் நிலை நிறுத்த வேண்டும்.


2. பிரிவினைவாதங்களை பற்ற வைப்பதை தவிர்க்கும் படி தனது நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.சுகாதாரமான குடி நீர்,கழிவு நீரேற்றம் மற்றும் நீடித்த வாழ்வாதாரம் ஆகியவற்றில் பற்றாக்குறையுடைய கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் அரசு நிர்வாகம் தனது சக்தியை கவனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் முன் வைத்தனர்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.